வருமான வரித்துறையின் பொறுப்பற்ற தன்மை - ராமதாஸ் சாடல்

First Published Dec 28, 2016, 1:22 PM IST
Highlights


ராம்மோகன ராவ் வீடு அலுவலகத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் அதுகுறித்த விபரங்களை வெளியிடாமல் வீண் விவாதங்கள் கிளம்புவதற்கு காரணமாக அமைகின்றனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். 

இது குறித்த அறிக்கை:

இவையெல்லாம் ஒருபுறமிருக்க இந்த விஷயம் இவ்வளவு சர்ச்சையாக்கப்படுவதற்கு வருமானவரித் துறையின் பொறுப்பற்ற அணுகுமுறையும் முக்கியக் காரணமாகும்.

இராமமோகன் ராவ் மற்றும் அவரது  உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தி முடிக்கப்பட்டு 5 நாட்களாகிவிட்ட நிலையில், அந்த சோதனை எதற்காக நடத்தப்பட்டது, தலைமைச் செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாற்றுகள் என்ன? சோதனையில் என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன? என்பது குறித்த விவரங்களை வருமானவரித்துறை வெளியிட்டிருந்தால் இந்த சர்ச்சை எழுந்திருக்காது. 

இப்போதாவது  இராமமோகன் ராவ் எழுப்பியுள்ள குற்றச்சாற்றுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அந்த விவரங்களை  வருமானவரித்துறை அளிக்க வேண்டும். இச்சர்ச்சைகளைக் காரணம் காட்டி, சோதனைகளை நிறுத்தி விடாமல், ஊழலில் தொடர்புடைய அனைவர் வீட்டிலும் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

click me!