#BREAKING மாநிலங்களவை தேர்தல்... யாரும் எதிர்பார்க்காத வேட்பாளரை அறிவித்த மு.க.ஸ்டாலின்..!

Published : Aug 22, 2021, 12:30 PM IST
#BREAKING மாநிலங்களவை தேர்தல்... யாரும் எதிர்பார்க்காத வேட்பாளரை அறிவித்த மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஏ. முகமதுஜான். கடந்த மார்ச் மாதம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். 

செப்டம்பர் 13ம் தேதி நடக்கும் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவதாக முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஏ. முகமதுஜான். கடந்த மார்ச் மாதம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த இடம் காலியானது. காலியான இடத்துக்கு 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. கொரோனா பரவல் காரணமாக இடைத்தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் முகமதுஜானால் காலியான இடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஆகும். செப்டம்பர் 1-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 3 ஆகும்.

இந்நிலையில், செப்டம்பர் 13ம் தேதி நடக்கும் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த எம்.எம்.அப்துல்லா திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணியின் இணைச்செயலாளராக இருந்து வருகிறார். ஓரிடத்துக்கு மட்டும் இந்தத் தேர்தல் நடைபெறுவதால், இந்த இடத்தை திமுக கைப்பற்றுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவர் 2025-ஆம் ஆண்டு வரை பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?