#BREAKING தமிழிசையை தொடர்ந்து மூத்த தலைவர் இல.கணேசனுக்கு ஆளுநர் பதவி... அசத்தும் பாஜக தலைமை..!

Published : Aug 22, 2021, 12:00 PM IST
#BREAKING தமிழிசையை தொடர்ந்து மூத்த தலைவர் இல.கணேசனுக்கு ஆளுநர் பதவி... அசத்தும் பாஜக தலைமை..!

சுருக்கம்

பாஜகவின் தமிழக மாநில தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்த இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் தமிழக மாநில தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்த இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூர் ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 20ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, சிக்கிம் ஆளுநர் கங்காதர பிரசாத் கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இல.கணேசன். மாநிலங்களவை முன்னாள் எம்.பி., பாஜகவில் தேசிய குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.  கடந்த காலங்களில் பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட இல.கணேசன் தமிழக பாஜக தலைவராக இருந்தவர்.

எப்படியாவது தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டும் என்பதால் தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா அளுநர் பதவியும், எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் தற்போது இல.கணேசனுக்கும் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!
ஒரு பாண்டிச்சேரிக்காரர் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்குகிறார்.! விஜய் முன்னாள் மேனேஜர் கடும் குற்றச்சாட்டு