
போக்குவரத்து துறையில் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தயாராகிக் கொண்டிருக்கிறது. பட் ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதல்வரிடம் பரிசீலித்து வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற விழாவில் 16 புதிய வழித்தடங்களில் போக்குவரத்து சேவையை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழகத்தில் தற்போது 16,650 பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட 2000 பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்படும். எவ்வளவு நஷ்டம் வந்தாலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது.
போக்குவரத்து துறையில் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தயாராகிக் கொண்டிருக்கிறது. பட் ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதல்வரிடம் பரிசீலித்து வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படும். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 1,800 காலிப் பணியிடங்கள் உள்ளன. நடத்துநர், ஓட்டுநர் பற்றாக்குறை உள்ளது என்றார்.
மேலும், கொடநாடு விவகாரம் குறித்துப் பேசிய அவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடநாடு விவகாரத்தில் தமிழக அரசின் மீது நிறையக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை வழங்குவது நிச்சயம் என்று குறிப்பிட்டார்.