மத்திய அமைச்சராகிறார் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி,.. உழைப்புக்கு கிடைத்த பரிசு..!

By Thiraviaraj RMFirst Published Jul 7, 2021, 3:29 PM IST
Highlights

பல்துறை வித்தகரான ராஜுவ் சந்திரசேகர் மத்திய அமைச்சராகவும் முத்திரை பதிப்பார் என நம்புகிறது பாஜக தலைமை.  
 

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்து வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களில் வென்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகள், பாஜக 6 தொகுதிகளில் வென்றது.

பாஜகவின் இந்த பெரும்பான்மைக்கு முக்கியக் காரணமாக கருதப்படுபவர் ராஜ்யசபா எம்.பி.,யும், பாஜக செய்தி தொடர்பாளருமான ராஜீவ் சந்திரசேகர். 

புதுச்சேரியில் ஆட்சியமைக்க பல மாதங்களாக தீவிர களப்பணியாற்றி வந்தது பாஜக. புதுச்சேரி தேர்தல் பாஜக மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ராஜ்யசபா எம்.பி., ராஜீவ் சந்திரசேகர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் களத்தில் இறங்கி சில மாதங்களாக தீவிரமாக செயல்பட்டுவந்தார். 

மக்களிடம் நேரடியாக சென்று பேசியது, 30 தொகுதி வாக்காளர்களின் விருப்பங்களை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயார் செய்தது முதல் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவது வரை அனைத்தையும் கவனமாக மேற்கொண்டார் ராஜ்ய சபா எம்.பி.ராஜீவ் சந்திரசேகர். அதன் காரணமாகவே பாஜக புதுச்சேரியில் வலுவாக காலூன்ற முடிந்தது. இந்த உழைப்பிற்காக பாஜக ராஜீவ் சந்திரசேகருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க முன் வந்துள்ளது.  பல்துறை வித்தகரான ராஜுவ் சந்திரசேகர் மத்திய அமைச்சராகவும் முத்திரை பதிப்பார் என நம்புகிறது பாஜக தலைமை.  
 

click me!