Breakingnews: 3 மூன்று மத்திய அமைச்சர்கள் ராஜினாமா... பாஜக அமைச்சரவையில் புதியவர்களுக்கு பதவி..!

By Thiraviaraj RMFirst Published Jul 7, 2021, 2:45 PM IST
Highlights

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் ராஜினாமா செய்துள்ளார். அதேபோல் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும் ராஜினாமா செய்துள்ளாதாக கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்படுவதால் பாஜக தலைவர்கள் டெல்லியில் உள்ள பிரதமர் மாளிகைக்கு வருகை தந்துள்ளனர். பாஜகவின் ஜோதிராதித்ய சிந்தியா, நாராயண் ரானே மற்றும் அனுப்ரியா ஆகியோர் பிரதமர் இல்லத்தில் முகாமிட்டுள்ளனர். 2019 ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக தலைமையிலான அரசாங்கம் இரண்டாவது முறையாக மத்திய அமைச்சரவை மறுசீரமைக்கப்படுகிறது. பாஜக வட்டாரங்களின்படி, ஜோதிராதித்ய சிந்தியா, சர்பஞ்ச் சோனா உள்ளிட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களுக்கு இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ராஜ்யசபா எம்.பி. ராஜீவ் சந்திரசேகருக்கும் மத்திய அமைச்சராக வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பீகாரைச் சேர்ந்த ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் சுரேஷ் அங்கடி ஆகியோரின் மறைவைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் காலியிடங்கள் உருவாகியுள்ளன. சிவசேனா மற்றும் அகாலிதளத்தைச் சேர்ந்த அமைச்சரவை உறுப்பினர்கள் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதால், அமைச்சரவை இடங்களும் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் ராஜினாமா செய்துள்ளார். அதேபோல் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும் ராஜினாமா செய்துள்ளாதாக கூறப்படுகிறது. 35க்கும் மேற்பட்ட புதிய அமைச்சர்கள் இன்று மாலை 6 மணிக்குப் பதவியேற்க உள்ள நிலையில், குழந்தை - பெண்கள் நலத்துறை அமைச்சர் தபாஸ்ரீ செளத்ரியும் பதவி விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

click me!