அமமுக நிர்வாகிகளுக்கு வலைவீசும் எடப்பாடி பழனிசாமி... ரூட்டை மாற்றும் சசிகலா..!

Published : Jul 07, 2021, 01:31 PM IST
அமமுக நிர்வாகிகளுக்கு வலைவீசும் எடப்பாடி பழனிசாமி... ரூட்டை மாற்றும் சசிகலா..!

சுருக்கம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து இருக்கீர்கள். இன்னும் ஒரு மாதத்தில் பெருந்தலைகள் எல்லாம் கம்பி எண்ணப் போகிறார்கள்.

அதிமுகவுக்கு இனி எல்லாமே நான்தான் என்று சசிகலா கூவிக்கொண்டிருக்கிறார். அதற்காக காலை முதல் மாலை வரை, லாக்டவுன் முடிஞ்சதும் வந்துவிடுவேன். எல்லோரையும் அரவணைத்து செல்வேன். கட்சியை சரி பண்ணிடுவேன் என்று தொடர்ச்சியா செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார். 

அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியும் வீட்டில் இருந்து வெளியே வராமல், அமமுக நிர்வாகிகளுக்கு வலை வீசிக் கொண்டு இருக்கிறார். அப்படியே சேலம் மாவட்டத்தில் இரண்டு அமமுக மாவட்ட செயலாளர்களுக்கு வலைபோட்டு இருக்கிறார். என்ன கேட்டாலும்  செய்து கொடுக்கலாம் என உத்தரவாதம் சொல்லி ஆள் அனுப்பி இருக்கிறார். ஆனால் அந்த  இண்டு பேரும் அசைந்து கொடுக்கவில்லையாம். அதில் ஒருவர் ஆளுங்கட்சி ஆட்சி நல்ல  நிர்வாகத்த கொடுக்கிறது. எனக்கு பிடித்த அரசாக இருக்கிறது. கடந்த ஆட்சி  ஆளுமைத் திறனே இல்லாமல் இருந்தது எனக் கூறி இருக்கிறார். 

இன்னொருத்தர், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து இருக்கீர்கள். இன்னும் ஒரு மாதத்தில் பெருந்தலைகள் எல்லாம் கம்பி எண்ணப் போகிறார்கள். இந்த கண்கொள்ளா காட்சியை பார்க்க நாங்கள் வெளியே இருந்தால்தான் நல்லா இருக்கும் என சொல்லியிருக்கிறார். எனினும் சில மாவட்டங்களில் இருந்து பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாம்.

 

அவர்கள் கட்சிக்கு வருகிறோம். உங்களுக்கு ஆதரவாக செயல்படுவோம், எங்களுக்கு என்ன லாபம் என கேட்கிறார்களாம். கரன்சி, பதவியை உங்களை தேடி வரும். உள்ளாட்சி தேர்தலில் சீட் உண்டு என்றும், சசிகலாவை நம்பி போகாதீர்கள். உங்களுக்கு வேண்டியதை நான் செய்கிறேன் என உறுதி கொடுத்து உள்ளாராம். இதனால், சசிகலா தரப்பு வேறு ஆயுதத்தை கையில் எடுத்து கட்சியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி இருப்பதாக கூறுகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை
வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி