
ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்கமாட்டார் என கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் இருபெரும் தூண்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் தீவிரமடைந்து வருகிறது. இருவரும் மாறி மாறி போட்டிபோட்டு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி பல ஆண்டுகளாக அரசியல் பேசிவருகிறார். ஆனால் நேரடி தேர்தல் அரசியலில் இதுவரை இறங்கவில்லை. ஆனால் கமலோ அரசியலில் ரஜினியை முந்திச்செல்கிறார் என்றே கூறவேண்டும்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கமலின் அண்ணன் சாருஹாசன், ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்கமாட்டார் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆரம்பகாலம் முதலே கமலைவிட ரஜினி தனக்கு நெருக்கம் எனவும் எனவே அவரைப் பற்றி தனக்கு தெரிந்தவரையில் ரஜினி அரசியல் கட்சி தொடங்கமாட்டார் என சாருஹாசன் தெரிவித்தார்.