மக்கள் நலனுக்காக திமுக ஆட்சியை பயன்படுத்தவில்லை: முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு!

 
Published : Oct 07, 2017, 06:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
மக்கள் நலனுக்காக திமுக ஆட்சியை பயன்படுத்தவில்லை: முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு!

சுருக்கம்

The DMK did not use the people for the benefit of the people

ஐந்து முறை வாய்ப்பளித்தும் மக்கள் நலனுக்காக திமுக ஆட்சியை பயன்படுத்தவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தருமபுரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது இந்த விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக மாவட்டங்களில் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தருமபுரியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்போது பேசிய அவர், ஸ்டாலின் பூதக்கண்ணாடியை கொண்டு குறையை தேடுவதாக கூறினார். அரசுக்கு நெருக்கடி கொடுத்து கெட்டப்பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டினார்.

ஆட்சி பொறுப்பேற்றது முதல் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். பிரச்சனையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை ஜெயலலிதா எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். 

ஐந்து முறை வாய்ப்பளித்தும் மக்கள் நலனுக்கு திமுக ஆட்சியை பயன்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். அரசு பலனை அனுபவித்துக் கொண்டு அரசை குறை கூறுபவர்களை மன்னிக்க முடியாது என்றார். மரத்தைவிட்டு பூ கீழே விழுவதால் மரத்துக்கு எந்த பாதிப்பு இல்லை என்று கூறினார். 

PREV
click me!

Recommended Stories

1 கோடி வாக்காளர்கள் நீக்கம்..! ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்..? புயலைக் கிளப்பும் பின்னணி..!
இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!