
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தில் அர்ச்சகர்கள் நியமனம் அண்மையில் நடத்தப்பட்டது. இதில், 6 பேர் தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் 30 பேர் என செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேற்கண்ட அர்ச்சகர்கள் நியமனத்தை குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற போராட்டம், தமிழகத்தில் சமூக ரீதியிலும் சட்ட ரீதியிலும் நீண்ட ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.