மருத்துவரிடம் உருக்கமாக பேசிய சசி! கணவர் நடராசன் எப்போது வீடு திரும்புவார்!

 
Published : Oct 07, 2017, 04:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
மருத்துவரிடம் உருக்கமாக பேசிய சசி! கணவர் நடராசன் எப்போது வீடு திரும்புவார்!

சுருக்கம்

When her husband Nadarasan returns home!

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்ததற்கு நன்றி என்றும், கணவர் நடராசன் எப்போது வீடு திரும்புவார் என்றும் சசிகலா மருத்துவர்களிடம் உருக்கமாக கேட்டுள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக் குறைவு காரணமாக தாம்பரம் அடுத்துள்ள மேடவாக்கம் அருகே குளோபல் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல், சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில்
உள்ளார்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நேற்று சிறை நிர்வாகம் 5 நாட்கள் பரோல் அளித்தது. சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டிருந்த
நிலையில் அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. சசிகலாவுக்கு சில நிபந்தனைகளையும் சிறை நிர்வாகம் விதித்தது.

பரோலில் வெளிவந்த அவர், இன்று, தாம்பரம் அடுத்த பெரும்பாக்கம் அருகே உள்ள குளோபல் மருத்துவமனைக்கு சசிகலா சென்றார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனை சந்தித்த சசிகலா அவரிடம் நலம் விசாரித்தார்.

மருத்துவரிடம், நான் என் கணவரை அருகில்  இருந்து கவனிக்க முடியாத நிலை உள்ளது. அவரை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளுங்கள். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்ததற்கு நன்றி. அவர் உயிரைக் காப்பாற்றிக் கொடுங்கள் என்றார். மேலும், கணவர் நடராசன் எப்போது வீடு திரும்புவார் என்றும் மருத்துவரிடம் சசிகலா கேட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!
ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!