
குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராசனை சந்தித்துவிட்டு, சசிகலா இன்று மதியம் தி.நகர் வீட்டுக்கு திரும்பினார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக் குறைவு காரணமாக தாம்பரம் அடுத்துள்ள மேடவாக்கம் அருகே குளோபல் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல், சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில்
உள்ளார்.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நேற்று சிறை நிர்வாகம் 5 நாட்கள் பரோல் அளித்தது. சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டிருந்த
நிலையில் அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. சசிகலாவுக்கு சில நிபந்தனைகளையும் சிறை நிர்வாகம் விதித்தது.
பரோலில் வெளிவந்த அவர், இன்று, தாம்பரம் அடுத்த பெரும்பாக்கம் அருகே உள்ள குளோபல் மருத்துவமனைக்கு சசிகலா சென்றார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனை சந்தித்த சசிகலா அவரிடம் நலம் விசாரித்தாக தெரிகிறது.
இன்று மாலை 5 மணி வரை சசிகலா மருத்துவமனையில் தங்கியிருக்க போவதாக தகவல் வெளியாகி இருந்தது. சசிகலா இன்று மதியம் சுமார் 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்து தி.நகர் வீட்டுக்கு திரும்பினார்.