
ஆளுநர் காதிற்கு சென்ற முதல் புகார் ..! முந்திக்கொண்டு பெருமையை தட்டி சென்றார் விஜயகாந்த்..!
தமிழகத்தில் புதிய ஆளுநராக பொறுபேற்றுள்ள பன்வாரிலால் புரோகித்தைஇன்று நேரில் சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தமிழக அரசியல் நிலையை பற்றி புகார் மனுவை ஆளுநரிடம் கொடுத்தார் விஜயகாந்த்.அதில்
தமிழக அரசு, டெங்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்,
ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வில்லை என்றும், தங்கள் பதவியை பாதுகாத்து கொள்வதிலேயே குறிக்கோளாக உள்ளனர் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
சிவாஜி கமல் இருவரும் படத்தில் தான் நடிப்பார்கள்....EPS OPS நிஜ வாழ்க்கையிலேயே நடிக்கிறார்கள் எனவும் அடுக்கடுக்காக குற்றத்தை முன்வைத்துள்ளார்
இதில் என்ன சிறப்பு என்றால், ஆளுநர் புதியதாக பொறுப்பேற்ற பின்னர், அவர் காதிற்கு சென்ற முதல் புகார் மனு , விஜயகாந்த் கொடுத்த புகார் மனு தான் என்பது குறிப்பிடத்தக்கது