அமைதியை நிலைநாட்ட அனைத்தும் செய்ய தயார்..! ரஜினி அதிரடி..!

By Manikandan S R SFirst Published Mar 2, 2020, 9:58 AM IST
Highlights

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து , அவர்களது ஆலோசனைகளை கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும், எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்தை ஆமோதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் அமைதியை நிலைநாட்ட தனது தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தான் தயாராக இருப்பதாகவும் ரஜினி காந்த் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி கலவரம் குறித்து தனது பலத்த கண்டனத்தை தெரிவித்திருந்தார். டெல்லி கலவரம் உளவுத்துறை தோல்வி, உளவுத்துறை என்பது உள்துறை அமைச்சகம் தோல்விதான், கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள் இல்லாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டுச் செல்லுங்கள் என ரஜினி ஆவேசமாக பேசியிருந்தார். குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்த ரஜினி, மத்திய அரசு அதில் பின்வாங்கும் என தான் நினைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

ரஜினியின் கருத்து தங்களுக்கு அதிருப்தியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை கேட்டறிந்த ரஜினி, தனது கருத்தையும் அவர்களிடம் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவா் அபுபக்கா் ரஜினியை சந்தித்து பேசியிருந்தார்.

🙏🏻 pic.twitter.com/erIYGE4hDv

— Rajinikanth (@rajinikanth)

 

இஸ்லாமிய தலைவர்கள் ரஜினிகாந்தை தொடர்ந்து சந்தித்து வந்தது அரசியல் அரங்கில் பரபரப்பை கிளப்பியது. இதனிடையே சிஏஏ குறித்து ஆலோசிப்பதற்காக இஸ்லாமிய தலைவர்களை சந்தித்து குறித்து ரஜினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து , அவர்களது ஆலோசனைகளை கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும், எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்தை ஆமோதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் அமைதியை நிலைநாட்ட தனது தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தான் தயாராக இருப்பதாகவும் ரஜினி காந்த் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

click me!