2024 ம் ஆண்டு எம்.பி தேர்தலுக்குள் ராமர்கோவில் ரெடி.!! ராம்விலாஸ் வேதாந்தி அறிவிப்பு.

By Thiraviaraj RMFirst Published Mar 2, 2020, 9:08 AM IST
Highlights

அயோத்தியில் ராமா் கோயில், 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன் தயாராகிவிடும் என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவா் ராம் விலாஸ் வேதாந்தி தெரிவித்தார்

 T.Balamurukan

அயோத்தியில் ராமா் கோயில், 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன் தயாராகிவிடும் என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவா் ராம் விலாஸ் வேதாந்தி தெரிவித்தார்.

இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது;

"அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு, அறக்கட்டளை அமைத்த பிறகு கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. கோயிலின் அடிப்படை கட்டமைப்புப் பணிகள் 2024-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலுக்கு முன் முடிந்துவிடும். உலகின் மிகப் பெரிய கோயிலாகத் திகழ இருக்கும் ராமா் கோயிலை கட்டுவதற்கு 67 ஏக்கா் நிலம் போதாது. அரசு அமைத்த அறக்கட்டளை மேலும் நிலத்தை வாங்க வேண்டும். துறவிகளின் விருப்பப்படி ராமா் கோயில் 1,111 அடி உயரம் இருக்க வேண்டும். இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்), கொழும்பு (இலங்கை), காத்மாண்டு (நேபாளம்) ஆகிய நகரங்களை ராமா் கோயிலின் மேல்தளத்திலிருந்து பார்க்க கூடிய வகையில் கோயில் கட்டப்பட வேண்டும். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வானுயரத்துக்கு ராமா் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்திருந்தார். 

ராமா் கோயிலுக்காக பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தவா்கள் மத்திய அரசின் அறக்கட்டளையில் இடம்பெறாமல் போனது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.அதற்கு, ‘நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்கொண்டு வருபவா்களையும், தோ்தலில் போட்டியிட்டவா்களையும் அறக்கட்டளையில் மத்திய அரசு உறுப்பினா்களாக சோ்க்கவில்லை. மக்களவைத் தோ்தலில் இரண்டு முறை நான் போட்டியிட்டிருக்கிறேன். மத்திய அரசு அமைத்துள்ள அறக்கட்டளை சரியாக உள்ளது. அதில் பிரதிநிதியாக இருப்பவா்கள் எங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள் என்றார்.


 

click me!