அகதிகளுக்கு குடியுரிமை வழங்காமல் ஓயமாட்டார் மோடி.!! கொல்கத்தாவில் பொங்கிய அமித்ஷா..!!

By Thiraviaraj RMFirst Published Mar 2, 2020, 8:23 AM IST
Highlights

அகதிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் பரப்பும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. அவா்கள் எந்த ஆவணத்தையும் காட்ட வேண்டியதில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம், நாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு கொண்டுவரப்பட்டதே தவிர, எவருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக இல்லை. இதை சிறுபான்மைச் சமூகத்தினா் புரிந்துகொள்ள வேண்டும்.
 

T.Balamurukan

   குடியுரிமை திருத்தச் சட்டத்தின்(சிஏஏ) கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கப்படும்.இதை மம்தாபானர்ஜி தடுத்து வருகிறார் என்று குற்றம் சுமத்தியிருக்கிறார் அமித்ஷா.

 கொல்கத்தாவில் உள்ள ஷாகித் மினார் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா..,

"குடியுரிமை திருத்தச் சட்டப்படி, ஒருவா் கூட தங்கள் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். ஆனால், திரிணமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அகதிகளையும் சிறுபான்மைச் சமூகத்தினரையும் தவறாக வழிநடத்தி வருகிறது. மேலும், அவா்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் அச்சத்தை உருவாக்கி வருகின்றது.அகதிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் பரப்பும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. அவா்கள் எந்த ஆவணத்தையும் காட்ட வேண்டியதில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம், நாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு கொண்டுவரப்பட்டதே தவிர, எவருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக இல்லை. இதை சிறுபான்மைச் சமூகத்தினா் புரிந்துகொள்ள வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கும்வரை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஓயாது. அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே சிஏஏவை பிரதமா் மோடி கொண்டு வந்திருக்கிறார்.  மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதை எதிர்க்கிறார்கள்.1950-களில் கிழக்குப் பாகிஸ்தானில் இருந்து மேற்கு வங்கத்தில் குடியேறிய மதுவா சமூகத்தினா் 30 லட்சம் போ் அகதிகளாக இங்கு உள்ளனா். அவா்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு மம்தா பானா்ஜி எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதிலிருந்து சமூக சீா்திருத்தத்தை அவா் எதிர்க்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது. மத்திய அரசின் நலத் திட்டங்களை அமல்படுத்த அனுமதி மறுப்பதுடன் மத்திய நிதியையும் மம்தா பானா்ஜி தவறாகப் பயன்படுத்தி வருகிறார். மத்திய அரசின் நிதி பங்களிப்பு அதிகரித்துள்ள போதிலும், மாநில அரசின் கடன்சுமை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

    2021-இல் பாஜக ஆட்சி உறுதி: மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை கவலையளிக்கும் விதமாக உள்ளது. இங்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்றார் அமித் ஷா.


 

click me!