ஜெயலலிதா பிறந்தநாளை ட்ரீட் கொடுத்து கொண்டாடிய ரஜினி: அ.தி.மு.க. வாக்கு வங்கிக்கு குறி வைக்கும் ‘அண்ணாத்த’!

By Vishnu PriyaFirst Published Feb 24, 2020, 6:58 PM IST
Highlights

டைட்டிலுக்கான வீடியோ வழக்கத்தை விட துள்ளலான, கிராமிய வாத்தியங்கள் கலந்த பின்னணிய் இசையுடன் வெளியாகி டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது.

ரஜினி! எனும் வார்த்தைக்கு பின்னால் அப்படியொரு எனர்ஜி மற்றும் புத்துணர்ச்சி மேஜிக் நிறைந்திருப்பது தமிழகம் அறிந்ததே. அவரது புதிய படம் பற்றிய எந்த ஒரு ஒற்றை வரி செய்தியும் கூட மிகப்பெரிய அளவில் வைரலாவதும், டிரெண்டிங்காவதும் நிதர்சனம். சாதாரண நாட்களில் ரஜினி படம் பற்றிய ஒரு போஸ்டர் வந்தாலும் கூட அது ஸ்பெஷல் நாளாகிவிடும். இச்சூழலில், தமிழகத்துக்கு செம்ம ஸ்பெஷல் நாளில் ரஜினியின் பட டைட்டிலே வெளியானால் எப்படி இருக்கும்? ச்சும்மா அதிரும்ல. பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த தினம். அ.தி.மு.க.வினர் மட்டுமல்லாது அந்த இரும்புப் பெண்மணியின் பிறந்தநாளை தமிழகமே நினைவு கூர்ந்து கொண்டிருந்தது. தமிழகமெங்கும் ஆளுங்கட்சி தொண்டர்களால்  விழாக்கோலம் கொண்டிருந்தது. 


இந்த நிலையில் அதே நாளில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு, அந்த டைட்டிலுக்கான வீடியோவும் வெளியானது. படத்தின் பெயர் ‘அண்ணாத்த’. டைட்டிலுக்கான வீடியோ வழக்கத்தை விட துள்ளலான, கிராமிய வாத்தியங்கள் கலந்த பின்னணிய் இசையுடன் வெளியாகி டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது. 
இந்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளில் தனது புதுப்பட டைட்டிலை வெளியிட்ட ரஜினியின் செயலை அரசியல் ரீதியில் பார்க்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அவர்கள் ‘ரஜினியின் புதுப்பட அறிவிப்போ அல்லது அது தொடர்பான என்ன வெளியானாலும் ஒரு வித புத்துணர்வு கிளம்பி, அவர் மீது ஈர்ப்பு உருவாகும். 

 

இந்நிலையில், கட்சி துவங்கிடும் முடிவிலிருக்கும் ரஜினி இப்படி ஜெயலலிதாவின் பிறந்த்நாளன்று செம்ம எழுச்சியாக தன் படத்தின் டைட்டிலையும், அதற்கான வீடியோவையும் வெளியிட்டிருப்பதன்  மூலம் தனக்கு மேலும் பெப் ஏற்றியிருப்பதோடு, உற்சாக மூடில் இருக்கும் அம்மா கட்சியின் தொண்டர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்த டைட்டில் வெளியீடை, அம்மா பிறந்த நாளுக்கு ரஜினி கொடுத்திருக்கும் ட்ரீட்டாகத்தான் பார்க்கிறாகள் அ.தி.மு.க.வின் லட்சக்கணக்கான தொண்டர்கள். ’தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது’ என ஜெயலலிதா, கருணாநிதியின் வின் மறைவுக்குப் பின் பேசியிருக்கும் ரஜினி, அதை தன்னைக் கொண்டு நிரப்புவதற்கும், அதற்கான தொண்டர் ஆதரவை உருவாக்குவதற்குமான வேலையை நச்சுன்னு துவங்கிட்டார்!” என்கிறார்கள். 
டைட்டில் வெளியானது ஒரு குத்தமாடா?

 

click me!