அ.தி.மு.க.வின் வண்டவாளங்கள் பா.ஜ.க. தண்டவாளத்தில்!: ஸ்டாலின் செம்ம கலாய்.

By Vishnu PriyaFirst Published Feb 24, 2020, 6:39 PM IST
Highlights

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு தமிழக அரசு ஏன் அஞ்சுகிறது என்றால், இவர்களின் வண்டவாளங்கள் எல்லாம் மத்தியரசின் கையில் உள்ளது. ஆட்சி போய்விட்டால் சிறைக்குதான் செல்ல வேண்டும் என்பதால், பா.ஜ.க. சொல்வது போலெல்லாம் அ.தி.மு.க. ஆடுகிறது. 
-மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் எதிர்த்து ஏதாவது கருத்து சொன்னால்தான் தன் பெயர் வெளியில் தெரியும்! என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கருதுகிறார். அக்கட்சியில் தான் இருப்பதை காட்டிக் கொள்வதற்காகவே இப்படி தினமும் ஏதாவது கூறிக் கொண்டிருக்கிறார். 
-ஸ்மிருதி இரானி (மத்திய அமைச்சர்)

*பயங்கரவாதிகளை காங்கிரஸ் எப்போதுமே பாராட்டி, போற்றி வந்துள்ளது. தேசபக்தர்களை இழிவுபடுத்துவது அக்கட்சியினரின் பிறவி குணம். ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ பற்றி மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் கேள்வி எழுப்பியுள்ளது, தேச பக்தர்கள் மற்றும் ராணுவத்தினரை அவமதித்த செயல். 
-சிவராஜ் சிங் சவுகான் (பா.ஜ.க. தலைவர்)

*தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வடமொழி கலந்து பெயர் வைக்கின்றனர். ஆங்கிலம் கலந்து பேசுகின்றனர். இதையெல்லாம் மாற்றிடத்தான், தூயத் தமிழ் பெயர்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளோம். 
-விஸ்வநாதன் (வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர்)

*தமிழக பள்ளிகளில் வழங்கப்படும் இலவச மதிய உணவுத் திட்டம், அரசுகள் மாறும்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இப்போது, பள்ளிக் குழந்தைகளுக்கான உணவு திட்டம் கூட தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ளது. 
-    கனிமொழி (தி.மு.க. எம்.பி.)

*காவிரி டெல்டா பகுதியில் தற்போது செயல்படுத்தப்படும் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டங்கள் தொடருமா என்பதை, வேளாண் மண்டல சட்டத்தில் குறிப்பிடவில்லை. தெளிவே இல்லாத சட்டத்தைத்தான் முதல்வர் இ.பி.எஸ். கொண்டு வந்துள்ளார். 
-    தினகரன் (அ.ம.மு.க. பொதுச்செயலாளர்)

*இதுவரை என்ன செய்தீர்கள்? என்று கேட்போர் பாராட்ட நாம் சில செய்திருக்கிறோம். ஆனால் இன்னும் நாம் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது. அதற்கான பரீட்சை வெகு அருகில் உள்ளது. ஓய்வு மட்டுமின்றி, யோசிக்கவும் நம்மிடம் நேரமில்லை. அடுத்து வரும் நாட்கள் எல்லாம் செயல் மட்டுமே. 
-கமல்ஹாசன் (ம.நீ.ம. தலைவர்)

*தாய்மொழி தினத்தன்று தமிழக இளைஞர்கள், நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் நிலை குறித்து அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயம். சமஸ்கிருதத்துக்கு இணையான, அதை விட இலக்கண பெருமை வாய்ந்த தமிழ் மொழிக்கு, சமஸ்கிருதத்தை விட  மிகக் குறைவான நிதியினை மத்திய அரசு ஒதுக்கியதை நினைவில் கொள்ள வேண்டும். 
-வைரமுத்து (கவிஞர்) 

*மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு தமிழக அரசு ஏன் அஞ்சுகிறது என்றால், இவர்களின் வண்டவாளங்கள் எல்லாம் மத்தியரசின் கையில் உள்ளது. ஆட்சி போய்விட்டால் சிறைக்குதான் செல்ல வேண்டும் என்பதால், பா.ஜ.க. சொல்வது போலெல்லாம் அ.தி.மு.க. ஆடுகிறது. 
-மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*நான் ஈழம் சென்றிருந்தபோது விடுதலைப்புலிகள் தலைவரான, தேசியதலைவர் மேதகு பிரபாகரனுடன் பேசியதில் சிலவற்றை மட்டுமே வெளியில் சொல்லியுள்ளேன். எனக்கும், தலைவருக்கும் இடையே நடந்த உரையாடலில் ஆயிரம் விஷயங்கள் உள்ளன!
 

click me!