திரௌபதி படத்தில் தவறாக ஒன்றும் இல்லை. திரௌபதி படத்தில் நடந்ததை தான் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் எந்த தப்பான விஷயத்தை சொல்லவில்லை ஏற்கனவே பாரிமுனையில் பத்திரப் பதிவுத் துறையில் 7000, 8000 போலி திருட்டு கல்யாணங்கள் ஒரு சில வழக்கறிஞர்கள் நடத்தப்பட்டது, ஆதாரத்தோடு தண்டிக்கப்பட்ட உள்ளனர்.
தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தால் எந்த பாதிப்பும் இல்லை என நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சலையில் உள்ள அவரது இல்லத்தில் எம்எல்ஏ கருணாஸ் திடீரென சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு நிறைவேற்றியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன் என்றார். தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தால் எந்த பாதிப்பும் இல்லை. முதலமைச்சரின் உறுதி மீது இஸ்லாமியர்கள் நம்பிக்கை வையுங்கள்.
மேலும், திரௌபதி படத்தில் தவறாக ஒன்றும் இல்லை. திரௌபதி படத்தில் நடந்ததை தான் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் எந்த தப்பான விஷயத்தை சொல்லவில்லை ஏற்கனவே பாரிமுனையில் பத்திரப் பதிவுத் துறையில் 7000, 8000 போலி திருட்டு கல்யாணங்கள் ஒரு சில வழக்கறிஞர்கள் நடத்தப்பட்டது, ஆதாரத்தோடு தண்டிக்கப்பட்ட உள்ளனர்.
அதனடிப்படையில் தான் திரௌபதி படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் நாடகக் காதல் இருக்கிறது எனவும் இல்லாவிட்டால் எப்படி போலியாக 8000 கல்யாணம் நடந்தது, அது எப்படி நீதிமன்றம் சென்றது என்று கேள்வி எழுப்பினார். தவறு செய்தவர்கள் எந்த சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.