சாவுறதுல இருந்து தப்பிக்க பைத்தியம் மாதிரி நடிக்கிறான்! பிடிச்சு தூக்குல போடுங்க சார் அவனை: பொளேர் உத்தரவு..!!

By Vishnu PriyaFirst Published Feb 24, 2020, 6:50 PM IST
Highlights

இந்தியாவின் மானத்துக்கும், ஒழுக்கத்துக்கும் ஒரே வார்த்தையில் சவால் விடுவதென்றால்....’நிர்பயா’ என்று சொன்னால் போதும், கதை முடிந்தது.

இந்தியாவின் மானத்துக்கும், ஒழுக்கத்துக்கும் ஒரே வார்த்தையில் சவால் விடுவதென்றால்....’நிர்பயா’ என்று சொன்னால் போதும், கதை முடிந்தது. கடந்த 2012ம் ஆண்டு  டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பஸ்ஸில் ஒரு காமவெறி கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,  வெளியில் தூக்கி எறியப்பட்டு குரூரமாக மரணித்தார். எட்டு வருடங்கள் நடந்த இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன் நான்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உத்தரவு விதிக்கப்பட்டது. நாடே கொண்டாடியது இந்த தீர்ப்பை. ஆனால் இரண்டு முறை  தூக்கு தண்டனை நிறைவேற்றுவது தள்ளி வைக்கப்பட்டு, இதோ மார்ச் மாதம் 3-ம் தேதி தூக்கு என்று தீர்ப்பாகியுள்ளது. இந்த நிலையில் இந்த தண்டனையை நிறுத்தவும், மரணத்திலிருந்து தப்பிக்கவும் நான்கு குற்றவாளிகளும் பெரும் பிரயத்னம் செய்து கொண்டிருக்கிறார்கள். 

 

குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், கோர்ட்டில் புதுசு புதுசாய் மனுக்களை ஃபைல் செய்து கொண்டுள்ளனர். இந்த நான்கு பேரில் ஒரு குற்றவாளியான  விஜய்குமார் சார்பில் ஃபைலான மனு ‘வினய்குமார் மன நலம் பாதிக்கப்பட்டுவிட்டார். எனவே அவரை மனவள ஆயுவு மையத்துக்கு அனுப்ப வேண்டும்.’ என்று கோரினர். ஆனால் இதை மறுத்திருக்கும் திகார் சிறையானது “வினய் குமாருக்கு மனநிலை சரியில்லை! என அவரது வழக்கறிஞர் கூறுவது தவறு. வினய்குமார் வேண்டுமென்றே சிறை சுவரில் மோதி, தன் தலையில் காயம் ஏற்படுத்திக் கொண்ட காட்சியானது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அத்துடன் தன் தாய், வழக்கறிஞரை கூட அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்பதிலும் உண்மையில்லை. தாயிடம் இருந்து வந்த இரு அழைப்புகளுக்கு அவர் பதில் கொடுத்துள்ளார். எனவே அவருக்கு மன நிலை சரியில்லை என கூறுவது பொய். எனவே தண்டனையை நிறைவேற்றலாம்.”என்று குறிப்பிட்டுள்ளனர். 

இத்துடன் திஹார் சிறை சார்பில் ஆஜரான மருத்துவரும் நான்கு தண்டனை கைதிகளின் உடல் நிலை நன்றாக உள்ளது! என சான்று அளித்துள்ளார்கள். இதையும் ஏற்று வினய் குமார் தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எனவே தூக்கு தண்டனை உறுதியாகிவிட்ட நிலையில், மார்ச் 3-ம் தேதி இந்த நான்கு பேரையும் தூக்கில் போட இருக்கும் பணியாளரை, இரண்டு நாட்களுக்கு முன் அனுப்புமாறு உத்திரபிரதேச சிறை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆக  இந்த முறை தூக்கு உறுதிதான்! என்கிறார்கள். தன் சாவை நாடே எதிர்பார்க்கிறது, கொண்டாடுகிறது! என்பதை விட ஒரு மனிதனுக்கு வேறு என்ன பெரிய சாபம், தண்டனை வேண்டும்?
 

click me!