60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அன்பழகன் சம்பாதித்து மதிப்பும் மரியாதையும் தான் என்று தெரிவித்த ரஜினி காந்த், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர் தளபதிக்கு ஆழ்ந்த இரங்கல் என்று கூறினார்.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 98 வயதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் காலனமானார். அவரது மறைவு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்பழகன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அன்பழகன் உடலுக்கு ஏராளமானோர் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
undefined
அன்பழகன் வீட்டிற்கு நடிகர் ரஜினி காந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த். அன்பழகனின் மறைவு பேரிழப்பு என்று தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அன்பழகன் சம்பாதித்து மதிப்பும் மரியாதையும் தான் என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர் தளபதிக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று கூறினார்.
பெரியப்பாவும் மறைந்து விட்டார்.. என்ன சொல்லி தேற்றிக்கொள்வேன்..? கண்ணீருடன் கலங்கிய ஸ்டாலின்..!
அன்பழகனின் மறைவையொட்டி திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் 1 வார காலத்திற்கு ரத்து செய்யப்படுவதாகவும் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அன்பழகன் உடல் இன்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட இருக்கிறது.