காசில்ல அன்பழகனுக்கு பயண காசு கொடுத்து மேடை ஏற்றிய கருணாநிதி..!

Published : Mar 07, 2020, 10:28 AM IST
காசில்ல அன்பழகனுக்கு பயண காசு கொடுத்து மேடை ஏற்றிய கருணாநிதி..!

சுருக்கம்

மிகவும் நெருக்கம் அந்த நட்புதான் சோதனை காலத்திலும் கைகொடுத்து அண்ணா இறந்தபோது கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்தவர் அன்பழகன் தான். அதேபோல், அண்ணாவிற்கு பின் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்து பின் கூட அன்பழகன் கருணாநிதி உறுதுணையாக இருந்தார். திமுக மூன்று முறை தேர்தலில் தோற்றபோது கூட அன்பழகன் கருணாநிதி பக்கமே நின்றார்.

அண்ணா திமுகவை விட்டு அதை வளர்க்கும் வேலையில் இறங்கிய போது மேடை மேடையாக பேசியது அன்பழகன் கருணாநிதியும் தான் காசில்ல அன்பழகனுக்கு பயண காசு கொடுத்து மேடையில் ஏறிப் பேச வைக்கும் அளவிற்கு கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் நட்பு இருந்தது.

மிகவும் நெருக்கம் அந்த நட்புதான் சோதனை காலத்திலும் கைகொடுத்து அண்ணா இறந்தபோது கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்தவர் அன்பழகன் தான். அதேபோல், அண்ணாவிற்கு பின் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்து பின் கூட அன்பழகன் கருணாநிதி உறுதுணையாக இருந்தார். திமுக மூன்று முறை தேர்தலில் தோற்றபோது கூட அன்பழகன் கருணாநிதி பக்கமே நின்றார்.

அதேபோல் மிக முக்கியமான காலகட்டம் எமர்ஜென்சி பிரச்சினை கருணாநிதி அன்பழகன் ஒன்றாகவே இருந்தனர். இந்தியாவில் அப்போது நடந்த கைது பெரிய பிரச்சனையை உண்டாக்கியது. நிறைய பேர் கட்சி மாறினார்கள். ஆனால், கருணாநிதி அன்பழகன் நட்பு மட்டும் ஆலமரம் போல் உறுதியாக வளர்ந்து கொண்டே இருந்தது. திமுகவின் மிகப்பெரிய பிளவாக கருதப்பட்ட வைகோ சென்றபோதும் கூட அன்பழகன் கட்சியில் உறுதியாக இருந்தார். அப்போது சில முன்னணி கட்சியில் அவருக்கு அழைப்பு விடுத்தன. ஆனால், தாய் கழகத்தை விட்டும், தாயை கொண்ட நண்பனை விட்டு ஒரு அடி கூட நகரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!