அப்பாவைவிட பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது சிரமம்.! அவரால் புகழப்பட்டேன்.திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்

By Thiraviaraj RMFirst Published Mar 7, 2020, 10:17 AM IST
Highlights

எனக்கு அப்பாவும் இல்லை: பெரியப்பாவும் இல்லை என்று உருக்கமாக பதிவு செய்து வருகிறார் ஸ்டாலின். 

T.Balamurukan இனமான பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் இன்று இறந்தார். அவரின் வாழ்க்கை திராவிட அரசியல் எல்லாம் திமுகவிற்கு மிகப்பெரிய சொத்தாக அமைந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் சிறுவயதில் இருந்தே அன்பழகன் கையைப்பிடித்து நடந்தவர். அவர் தான் இன்று மாபெரும் இயக்கத்திற்கு தலைவராக்கினார். இப்படி பல்வேறு சமயங்களில் ஸ்டாலினுக்கு உதவியாக இருந்தவர் இன்று அவருடன் இல்லை என்பதால் கண்கலங்கி நிற்கிறார் ஸ்டாலின்.

எனக்கு அப்பாவும் இல்லை: பெரியப்பாவும் இல்லை என்று உருக்கமாக பதிவு செய்து வருகிறார் ஸ்டாலின். அவர் எழுதிய இரங்கல் கடித்தில்...” பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர்! முத்தமிழ் அறிஞர் கலைஞர் தாங்கும் நிலமாய் இருந்தவர்! எனது சிறகை நான் விரிக்க வானமாய் இருந்தவர்! என்ன சொல்லி என்னை நானே தேற்றிக்கொள்வது.
தலைவர் கலைஞர்; அவர்கள் என்னை வளர்த்தார்! பேராசிரியர் பெருந்தகையோ என்னை வார்ப்பித்தார்! எனக்கு உயிரும் உணர்வும்  தந்தவர் கலைஞர்! ஆனால் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர்! இந்த நான்கும் தான் என்னை இந்த இடத்தில் உயர்த்தி  வைத்துள்ளது.
“ எனக்கு அக்காள் உண்டு அண்ணன் இல்லை போராசிரியர் தான் அண்ணன் என்றார் தலைவர். எனக்கும் அத்தை உண்டு பெரியப்பா இல்லை. பேராசிரியர் பெருந்தகையே பெரியப்பாவாக ஏற்று வாழ்ந்தவன். அப்பாவை விட பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது சிரமம். ஆனால் நானோ பேராசிரியர் பெரியப்பாவினால் அதிகம் புகழப்பட்டேன். அவரே என்னை முதலில் “கலைஞருக்கு பின்னால் தம்பி ஸ்டாலின் தலைவர் என்று அறிவித்தார்.


அப்பா மறைந்த போது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன். இன்று பெரியப்பாவும் மறைந்த போது என்ன சொல்லி என்னை  நானே ஆறுதல் கொள்வேன். பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.
 

 

click me!