ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர்..! அன்பழகனை புகழ்ந்த கமல்..!

Published : Mar 07, 2020, 10:38 AM IST
ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர்..! அன்பழகனை புகழ்ந்த கமல்..!

சுருக்கம்

தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 98 வயதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் காலனமானார். அவரது மறைவு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்பழகன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் அன்பழகனுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், 'தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது.   அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

பெரியப்பாவும் மறைந்து விட்டார்.. என்ன சொல்லி தேற்றிக்கொள்வேன்..? கண்ணீருடன் கலங்கிய ஸ்டாலின்..!

PREV
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!