ரஜினியின் உச்சக்கட்ட ஆசை... அண்ணாத்த கியாரே செட்டிங்கா..?

By Thiraviaraj RMFirst Published Oct 29, 2021, 5:17 PM IST
Highlights

அண்ணாத்த படத்திற்கு வேறு வகையில் ப்ரமோஷன் தருகிறார் என விமர்சிப்பவர்கள் இதனை மீண்டும் ஒருமுறை படியுங்கள்

எம்.ஜி.ஆர், சிவாஜி நடிக்க ஆரம்பித்தபின் மிக அழகாக சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் ஹீரோக்கள் அதை மாற்றி கருப்பாக இருந்த ரஜினி என்ற இளைஞன் எல்லோரையும் தன் மேஜிக் நடிப்பால் வித்தியாச வில்லதனத்தால் வசீகரித்தார்.

ரஜினி ஒரு நாளில் நடிகன் ஆகிவிடவில்லை,ஆரம்பம் தொட்டே நடிகன்தான். ரஜினி சிறுவயதில் இருந்து மேடை நாடகங்களில் நடித்துவந்தார் அங்குதான் அவரின் நடிப்புக்கான விதை ஊன்றப்பட்டது. தாயில்லா ரஜினிக்கு நண்பர்களே புகலிடம். அதுவும் வயதுக்கு மீறிய நண்பர்கள் அவர்கள் மூலமாக கற்றதும் பெற்றதும் ஏராளம். அண்ணன் வீட்டில் சும்மா உட்கார்ந்து சோறு சாப்பிடக்கூடாது என்பதற்காக கண்டக்டர் வேலைக்கு போனார். ஒரு கட்டத்தில் மனம் ஒட்டாமல் வேலை செய்யபிடிக்காமல் சென்னைக்கு கிளம்பினார்.

ஃபிலிம் இண்ஸ்டியுட்டில் சேர்ந்த ரஜினிக்கு பாடம் எடுத்தவர்களில் முக்கியமானவர் சித்தலிங்கய்யா. கன்னடத்தில் மிக முக்கிய இயக்குனர். நடிகர் முரளியின் தந்தை. ரஜினி மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் பாலசந்தருக்கு ரஜினியை ரெக்கமெண்ட் செய்ததும் அவர்தான். பாலசந்தர் பார்வை பட்டு "சிவாஜிராவ் கெய்க்வாட்" ஆக இருந்தவர் ஒரு ஹோலி நாளில் "ரஜினி" ஆனது அனைவரும் அறிந்தது. 

ஒரு ஸ்கூட்டர், ஒரு சொந்த வீடு இருந்தால் போதும் என்ற லட்சியதுடன் சினிமாவில் நுழைந்த ரஜினிக்கு திடீர் புகழ் அளவுக்கதிகமான பணம் நிறைய குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் கொடுக்க மனம் மாறிப்போனார். கமல் யாரை காதலித்தார் என அதிக மக்களால் நம்பப்படுகிறதோ அவரைத்தான் ரஜினி காதலித்தார். அந்த மயிலும் ரஜினியைத்தான் காதலித்தது. ரஜினி பெண் கேட்டு வீட்டுக்கு போக, பெண் கொடுக்கலாம் என முடிவு செய்தபோது கரண்ட் கட் ஆக பெண் தர மறுத்து விட்டார் பெண்ணின் அம்மா. 

பெர்சனல் வாழ்க்கையை பொருத்தவரை ரஜினிக்கு கமலும் ,கமலுக்கு ரஜினியும் பெர்சனல் அட்வைசர்கள். கமர்சியல் ராஜா என்ற பட்டத்தை ரஜினி எளிமையாக பெறவும் இல்லை. அதை எளிதாக தக்க வைத்துக்கொள்ளவும் இல்லை. மதிய வேளைகளில் பைட் சீன் எடுத்தால் சாப்பாடு சாப்பிட மாட்டார். நல்லா சாப்பிட்டுவிட்டு நடித்தால் அங்கு காசு கொடுத்து சினிமா பார்க்க வரும் ரசிகனுக்கு நியாயம் செய்யும் வகையில் சுறுசுறுப்பாக நடிக்க முடியாது. அவனுக்கு நான் மத்தியானம் நடிக்கிறது தெரியாது என சொல்லி வெறும் ரசத்தை மட்டும் குடித்துவிட்டு நடிக்க போவாராம்.

 

ரஜினி கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு படங்களில் குறுக்கீடு செய்யமாட்டார் அதே போல் ஒவ்வொரு படம் முடிந்து பூசணிக்காய் உடைத்ததும் அந்த சூட்டிங் ஸ்பாட்டிலேயே மீசையை மழித்துவிடுவார். பிறகு அந்த படத்தில் நடிக்க மாட்டேன் அனைத்தும் இயக்குனர் பொறுப்பு என்பது அதிலுள்ள தகவல். அப்படி மீசையை எடுத்தும் சில பேட்ச் ஒர்க்குகளுக்காக நடித்த படங்கள் சிவாஜி ( தெலுங்கு, ஹிந்தி பதிப்பு பர்ஸ்ட் நைட் ட்ரீம் சாங் சீன்களுக்காக ) குசேலன் -பசுபதி தோளில் கைபோட்டு  செல்லும் சீன். (ரஜினி படம் ரிலீசாகும்போது மட்டும் பரபரப்புக்காக எதையாவது பேசுவார். முந்தைய அவரது படம் ரிலீசாகும் வரை அரசியல் பேசினார். குட்டிக்கதை சொன்னார். இப்போது அரசியல் முடிவை கைவிட்டதால், அண்ணாத்த படத்திற்கு வேறு வகையில் ப்ரமோஷன் தருகிறார் என விமர்சிப்பவர்கள் இந்தப்பாராவை மீண்டும் ஒருமுறை படியுங்கள்)

பாபா தன்னுடைய கடைசி படம் என அறிவித்து படத்தை ஆரம்பித்தார். அண்ணாமலையில் அரசியல் பேச ஆரம்பித்தார். 95ல் முத்து-வில் நான் பாட்டுக்கு என் வழியில போய்கிட்டிருக்கேன் இடைஞ்சல் செஞ்சா கஷ்டம் உங்களுக்குத்தான் என ஜெ, வையும் ,2003 ல் அய்யா உங்கள நம்பி ஆட்சிய கொடுத்தேன் ஆனா நீங்க வாக்கை காப்பாத்தல என கருணாநிதிக்கும் பன்ச் வைத்தார். பிறகு இரு தலைவர்களுக்கும் பொதுவானவராக அடையாளம் காட்டிக்கொண்டார்.

  முதலில் தலைப்பு. பிறகுதான் கதை. பாட்ஷாவுக்கும், படையப்பாவுக்கும் இதுதான் நடந்தது. ஆன்மீக தேடல் ஒரு பக்கம் இருந்தாலும் மக்களுக்கு உதவுவதில் குறை வைக்கவில்லை. 90களிலேயே மருத்துவ உதவி கேட்டு தகுந்த ஆதாரங்கள் வைத்து அவர் முகவரிக்கு அனுப்பினால் நிச்சயம் உதவி  கிடைக்கும்.
                      
 உச்சகட்ட புகழையும், பணத்தையும் அனுபவித்து விட்ட ரஜினியின்  விருப்பம் அவர் அவராகவே இருக்க வேண்டும் என்பதே. அதாவது "சிவாஜிராவ் கெய்க்வாட்" ஆக இருக்கவேண்டும். இன்றும் மாறு வேடத்தில் பல இடங்களுக்கு சாதாரணணாக செல்கிறார். மாறுவேடத்தில் ரோட்டில் செல்வது ,சிறிய கடையாய் இருந்தாலும் டேஸ்ட்டாக இருக்கும் கடையில் சாப்பிடுவதும்  , மக்களுடன் மக்களாக சினிமா பார்ப்பதும் ரஜினிக்கு மிக பிடித்தமான விஷயங்கள். 

click me!