சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக தலைமை தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தற்போது உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.அதிமுக வேட்பாளர் ஏகே.போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.மேலும் ஜெ கைரேகை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்குமாறு ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனை தொடர்ந்து சிகிச்சையில் இருந்த திருபரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமை தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆஜராகி விளக்கமளித்தார்.