AIADMK: 4 ஆண்டுகள் கழித்து விசாரிப்பது சரி இல்லைங்க.. கதறிய படி சுப்ரீம் கோர்ட் படியேறிய ராஜேந்திர பாலாஜி.!

Published : Dec 10, 2021, 06:47 AM ISTUpdated : Dec 10, 2021, 07:20 AM IST
AIADMK: 4 ஆண்டுகள் கழித்து விசாரிப்பது சரி இல்லைங்க.. கதறிய படி சுப்ரீம் கோர்ட் படியேறிய ராஜேந்திர பாலாஜி.!

சுருக்கம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது. அதாவது, நீதிபதி சத்திய நாராயணன் அளித்த தீர்ப்பில், ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதி ஹேமலதா வாசித்த தீர்ப்பில், நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்குப்பதிவு செய்து விசாரிப்பது இறந்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போல் ஆகும். 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடர்ந்த வழக்கை 4 ஆண்டுகள் கழித்து உயர்நீதிமன்றம் விசாரிப்பது தவறு என உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மகேந்திரன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், ராஜேந்திர பாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும் விசாரணையை தொடர வேண்டியதில்லை என்றும், வழக்கை முடிக்க பொது துறை உத்தரவிட்டதாக அறிக்கையில் லஞ்ச ஒழிப்புதுறை தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க;- ரவுசு காட்டிய ராஜேந்திர பாலாஜியை ரவுண்ட் கட்டும் வழக்குகள்.. கைது பீதியில் ஜாமீன் கோரி மனு..!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது. அதாவது, நீதிபதி சத்திய நாராயணன் அளித்த தீர்ப்பில், ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதி ஹேமலதா வாசித்த தீர்ப்பில், நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்குப்பதிவு செய்து விசாரிப்பது இறந்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போல் ஆகும். எனவே மேற்கொண்டு விசாரிப்பதால் எந்தவித பலனும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க;- திருட்டு வழக்கில் திமுக பிரமுகர் கைது.. போலீசாரை தாக்கி கை விலங்கு உடைப்பு.. விடியா அரசை விடாமல் அடிக்கும் EPS

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றாமல் விசாரணை நடத்தி வருகிறது. இது காலம் கடந்த குற்றச்சாட்டு என்பதால் அதில் முகாந்திரம் இல்லை என்றும் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்டு 19ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்கலாம். ஆனால் உத்தரவு பிறப்பிக்க கூடாது என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாறுபட்ட நிலைப்பாட்டை அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக விசாரித்து முடித்த வழக்கை நான்கு ஆண்டுகள் கழித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து மீண்டும் விசாரித்தது என்பது முற்றிலும் தவறாகும். அதனால் தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என். நேரு தரப்பு திட்டம்..? அமலாக்கத்துறை பகீர் தகவல்..!
நீதித்துறையில் மணி மகுடம்..! 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..!