Thirumavalavan : வெட்கக்கேடு.! வேண்டியவர்களை பதவியில் உட்கார வைக்க அவசர சட்டமா.? நாடாளுமன்றத்தில் திருமா அனல்!

Published : Dec 09, 2021, 11:14 PM ISTUpdated : Dec 10, 2021, 05:51 AM IST
Thirumavalavan : வெட்கக்கேடு.! வேண்டியவர்களை பதவியில் உட்கார வைக்க அவசர சட்டமா.? நாடாளுமன்றத்தில் திருமா அனல்!

சுருக்கம்

பொதுவாக மாநில அரசுகளின் மீது அல்லது காவல்துறையின் மீது நம்பிக்கை இழக்கிற போது சிபிஐ விசாரணை வேண்டும் என்றுதான் நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அந்தளவுக்கு சிபிஐ மீது ஒரு நம்பகத்தன்மை இருந்தது. 

ஒரு தனிநபரை அந்தப் பதவியில் நீடிக்க வைப்பதற்காக ஒரு பெரிய அரசு மிகப்பெரிய கேந்திரங்களை கொண்டிருக்கிற அரசு ஒரு தனிநபரின் பதவியை நீடிப்பதற்காக வளைந்து கொடுக்கிறது என்று திருமாளவன் நாடாளுமன்றத்தில் பேசினார்.

மக்களவையில் இன்று பேசியது பற்றி ஃபேஸ்புக்கில் விசிக தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் பகிர்ந்துள்ளார். அதில், “நடுவண் விழிப்புணர்வு ஆணையம் (The Central Vigilance Commission) மற்றும் மத்தியப் புலனாய்வுத் துறையின் (Central Bureau Investigation-CBI) திருத்த மசோதாக்கள் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மசோதாக்களையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களே இடைவெளி உள்ள நிலையில் அவசரம் அவசரமாக இந்த இரண்டு மசோதாக்களுக்குமான அவசரச் சட்டத்தை அரசு கொண்டு வந்தது ஏன்! அவ்வளவு அவசரமும் அவசியமும் ஏன் என்கிற கேள்வி எழுகிறது, நாட்டுமக்கள் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்கள்.

ஒரு தனிநபரை அந்தப் பதவியில் நீடிக்க வைப்பதற்காக ஒரு பெரிய அரசு மிகப்பெரிய கேந்திரங்களை கொண்டிருக்கிற அரசு ஒரு தனிநபரின் பதவியை நீடிப்பதற்காக வளைந்து கொடுக்கிறது, வரிந்துகட்டிக் கொண்டு வேலை செய்கிறது என்பது உள்ளபடியே வெட்கக்கேடாக இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பதவியை நீடிப்பது என்பது பிரச்சினை அல்ல. ஆனால் இந்த நபருக்குதான் பதவியை நீடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது ஏன்? "உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிகிறது" உங்களுடைய விருப்பு வெறுப்பு இதில் வெளிப்படுகிறது. உங்களுக்கு வேண்டியவர்களை பதவியில் நீடிக்க வைப்பதன் மூலம் அந்த துறையை சிபிஐ மற்றும் என் போஸ்ட் மண்ட் டைரக்டட் என்கிற இந்த இரண்டு துறைகளையும் தமது கைப்பாவைகளாக கையாள வேண்டும் என்கிற வேட்கை ஆட்சியாளர்களின் கைகளில் இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது. அந்த வகையில் இந்த அவசரத்தை நான் வன்மையாக எதிர்க்கிறேன். இந்த இரண்டு மசோதாக்களையும் எதிர்க்கிறேன்.

பொதுவாக மாநில அரசுகளின் மீது அல்லது காவல்துறையின் மீது நம்பிக்கை இழக்கிற போது சிபிஐ விசாரணை வேண்டும் என்றுதான் நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அந்தளவுக்கு சிபிஐ மீது ஒரு நம்பகத்தன்மை இருந்தது. சிபிஐ நேர்மையாகச் செயல்படும், புலனாய்வு செய்யும், உண்மையைக் கண்டுபிடிக்கும், உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்கும் என்கிற நம்பகத்தன்மை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால். இன்றைக்கு சிபிஐ மீதும் என் போஸ்ட் மண்ட் டைரக்டட் என்கிற அந்த துறையின் மீதான நம்பகத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அந்த அளவுக்கு அரசியல் தலையீடுகள் இருக்கின்றன, ஆட்சியாளர்களின் தலையீடுகள் இருக்கின்றன என்பது இன்றைக்கு நாட்டு மக்களிடையே வெளிச்சமாக இருக்கிறது.
 
இந்த நிலையிலேயே ஒரு தனிநபரை அல்லது தங்களுக்கு வேண்டியவர்களை இந்த பதவியில் தக்க வைப்பதற்காக நீட்டிப்பதற்காக இந்த அவசரச் சட்டத்தை கொண்டு வந்த போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் வன்மையாக கண்டிப்பதோடு இந்த இரண்டு மசோதாக்களையும் எதிர்க்கிறேன்.” என்று திருமாவளவன் பேசினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என். நேரு தரப்பு திட்டம்..? அமலாக்கத்துறை பகீர் தகவல்..!
நீதித்துறையில் மணி மகுடம்..! 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..!