உள்ளாட்சித் தேர்தல் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியான நாள், ராஜேந்திர பாலாஜியைச் சந்திக்க அவரது வீட்டின் முன் உள்ளூர் நிர்வாகிகள் குவிந்திருக்கிறார்கள்.
திருச்சி சிறையிலிருந்து நான்கு வார நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் அருகிலுள்ள திருத்தங்கல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். ஓரிரு நாள்கள், கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்காமல் உறவினர்களுடன் மட்டுமே நேரத்தைச் செலவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர்கள் நான்கு பேர் ராஜேந்திர பாலாஜியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியான நாள், ராஜேந்திர பாலாஜியைச் சந்திக்க அவரது வீட்டின் முன் உள்ளூர் நிர்வாகிகள் குவிந்திருக்கிறார்கள். அதனால் மீண்டும் சகஜநிலைக்கு வந்து இருக்கிறாராம் ராஜேந்திர பாலாஜி.
இந்த நிலையில் தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள் மாவட்ட செயலாளராக இருக்கும் ராஜேந்திர பாலாஜியை சந்தித்து வந்துள்ளனர். அவர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, ’'உள்ளாட்சித் தேர்தலில் போட்டி போட விரும்புவார்கள் என்னிடம் பணத்தை எதிர்பார்க்காதீங்க. ரொம்ப நொந்து கிடக்குறேன் கறாராக கூறி விட்டாராம்.
இதுகுறித்து பேசிய விருதுநகர் மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள், "ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் என்பது அனைவருக்கும் தெரியும். தலைமறைவு, சிறை, ஜாமீன் என இவ்வளவு நடந்தும் மாவட்டச் செயலாளரான ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தன் சார்பாக ஒரு குழுவை ராஜேந்திர பாலாஜியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. எனவே ராஜேந்திர பாலாஜி மீது புகார் தெரிவித்து கடிதம் அனுப்பினால் கடிதம் அனுப்பியவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சூழல் இப்போது உள்ளது.
அதனால் தான் தன்னால் உள்ளாட்சி தேர்தலில், தான் செலவு செய்ய இயலாது என வெளிப்படையாகவே கூறி இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. முதல்வர் வேட்பாளர் யார் என்று கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் அதிமுகவுக்குள் விவாதம் வெடித்தபோது, எடப்பாடியை முன்னிறுத்தி தான் தேர்தலை சந்திப்போம் என்று அழுத்தம் திருத்தமாக கூறியவர் ராஜேந்திர பாலாஜி. அதனால்தான் இப்போதும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு ராஜேந்திர பாலாஜிக்கு இருக்கிறது.
ஆனால், ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்திற்கு சென்றாலும் அதிமுகவுக்கு அது பின்னடைவாகவே இருக்கும் என்கிறார்கள் விருது நகர் அதிமுகவினர். இதனால் திக்கற்று கிடக்கிறார்கள் விருதுநகர் மாவட்ட நகர்புற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக வேட்பாளர்கள்.
ராஜேந்திர பாலாஜியின் இந்த முடிவுக்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அவர் தலைமறைவாக இருந்தபோது பாதுகாக்க பா.ஜ.க-நிர்வாகிகள் சிலர் உதவினார்கள். அந்த உதவியைக் கூட அ.தி.மு.க நிர்வாகிகள் செய்யாததால் ராஜேந்திர பாலாஜிக்கு மன உளைச்சலை அதிகப்படுத்தியிருந்தது. அப்போது திருச்சி மத்தியச் சிறைக்குப் பார்க்க வந்த கட்சி நிர்வாகிகளை நேரில் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து வந்தார் ராஜேந்திர பாலாஜி.
இதையும் படியுங்கள்: - கெஞ்சும் காங்கிரஸ்... மேடையிலேயே அட்டாக் செய்த முதல்வர் முக.ஸ்டாலின்... அதிர்ச்சி கொடுக்க தயாராகும் திமுக..!
`நான் யாரையும் பார்த்துப் பேசும் மனநிலையில் இல்லை!' என்று வழக்கறிஞரைத் தவிரக் கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாமல் உறவினர்களையும் சந்திப்பதைத் தவிர்த்து வந்தார் அந்த விக்தியும் இப்போது அவர் ஒதுங்கிக் கொள்ள ஒரு காரணம் என்கிறார்கள்.