ஜல்லிக்கட்டை காண சசிகலாவுக்கு அழைப்பு விடுத்த ராஜசேகர் - நேரில் சந்திப்பு

 
Published : Jan 28, 2017, 12:29 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
ஜல்லிக்கட்டை காண சசிகலாவுக்கு அழைப்பு விடுத்த ராஜசேகர் - நேரில் சந்திப்பு

சுருக்கம்

தமிழகத்தல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்ப்க ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், பல்வேறு கண்டன அறிக்கைகளும், ஆர்ப்பாட்டமும் நடத்தினார். ஆனால் தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

இதையொட்டி இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கடந்த 15ம் தேதி, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அலங்காநல்லூரில் திரண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்த, போலீசாரும் குவிக்கப்பட்டனர். அதில், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ், ஆர்யா உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

அந்த நேரத்தில் சிலர் மாடுகளை அவிழ்த்துவிட்டதால், போலீசார் தடியடி நடத்தினர். மேலும், 250க்கு மேற்பட்டோரை கைது செய்தனர்.

இச்சம்பவத்தை கண்டித்து சென்னை மெரினாவில் லட்சத்துக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஒரு வாரத்துக்கு மேலாக தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பரவி, இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும், ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டத்தை கைவிடக் கோரி மாணவர்களிடம்,, போலீசார் பலமுறை சமரசம் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால், மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. போர்க்களம் போல் காட்சியளித்தது.

இதற்கிடையில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், டெல்லி சென்று, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அவசர தடை உத்தரவை பெற்று வந்தார். மேலும், சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரைவு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வரைவு மசோதா தாக்கல் செய்ததற்கும், டெல்லி சென்று அவசர சட்டம் பெறுவதற்கும் காரணமாக இருந்த அதிமுக பொது செயலாளர் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்து, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், அனைத்து பகுதியிலும் போஸ்டர் ஒட்டினார். இதை பார்த்த பொது மக்கள் ஆச்சர்யம் அடைந்த்தனர்.

இதை தொடர்ந்து சசிகலாவை, நேற்று மாலை ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் சந்தித்தார். அப்போது, ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடத்துவதற்கு வழி வகை செய்தமைக்கு நன்றியை தெரிவித்து கொண்டார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும்போது, சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது, ஜல்லிக்கட்டு பேரவையில் செயலாளர் பழனிவேல், துணைச் செயலாளர் ஜீவா ஆகியோர் உடன் இருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு