135 எம்எல்ஏக்களும் தனது கட்டுப்பாட்டில்தான் உள்ளனர் - கட்சியினருக்கு காட்டிய சசிகலா

 
Published : Jan 28, 2017, 11:52 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
135 எம்எல்ஏக்களும் தனது கட்டுப்பாட்டில்தான் உள்ளனர் - கட்சியினருக்கு காட்டிய சசிகலா

சுருக்கம்

அதிமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று மாலை திடீரென நடந்தது. எந்த ஒரு அவசியமும் இன்றி, கூட்டம் நடத்தப்பட்டதால், எதற்காக இந்த கூட்டம் நடந்து இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.

சட்டமன்ற கூட்ட தொடர் நடைபெறும் நிலையில், ஆட்சியும் அதிகாரமும், ஒ.பி.எஸ். என்னும் தனி மனிதர் கையில் இருக்கும் நிலையில், கட்சி மட்டும் தான் சின்னம்மா கையில் உள்ளது. தற்போது, ஆட்சியும் தனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை நிரூபிக்கும் சந்தர்ப்பமாகவே, இந்த கூட்டம் கூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

எம்எல்ஏ கூட்டத்துக்கு வந்தவுடன், 10க்கு மேற்பட்ட எம்எல்ஏக்கள் சின்னம்மாவே வருக, முதலமைச்சர் பதவியை பெருக என சத்தமாக கோஷமிட்டனர். இது ஒ.ன்னீர்செல்வத்தை நெளிய செய்தது.

சின்னம்மா சசிகலா, என்ன சொன்னாலும் செய்ய தயார் என்ற நிலையிலேயே உள்ளார் ஒ.பி.எஸ். ஆனால், ஊடகங்களில் வரும் செய்திகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒ.பிஎஸ்சை திசை மாற செய்து விடுமோ என்ற பயமும் அதிமுக தலைமைக்கு தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது.

எனவே தான், அவசர அவசியம் இல்லாத இந்த காலகட்டத்தில் எம்எல்ஏக்கள் நேரடி சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாம். கட்சி தலைமைக்கும், எம்எல்ஏ, எம்பிக்களுக்கு இடையே, இடைவெளி ஏற்பட்டு விடக்கூடாது என்பது முக்கிய காரணமாம். கூட்டத்துக்கு, ஏதேதோ எதிர் பார்த்து சென்ற எம்ல்ஏ, எம்பிக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது.

சுமார் 15 நிமிடம் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவிடம் இருந்து மட்டுமே, “ஒன்சைடாக” உத்தரவுகள் பறந்ததாம்.

சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் எம்எல்ஏக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும். அதாவது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை எவை, எவை என்பதை சசிகலா உத்தரவாக பிறப்பித்தாராம். மற்றபடி பெரிய அளவிலான முக்கியமான கருத்துகள் எதுவும் வெளியிடவில்லையாம்.

இறுதியாக பெண் எம்எல்ஏக்களுடன் தனியாகவும், அனைத்து எம்எல்ஏக்களுடன் ஒரு குழுவாகவும், புகைப்படம் எடுத்து கொண்டனர். ஒரு புகைப்படத்தில் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, செந்தில்பாலாஜி, சி.வி.சண்முகம், சரோஜா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மிஸ்ஸிங்.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!