
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்த போது, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக சிங்கை ராமச்சந்திரனை நியமித்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்போது, அதிமுகவின் வெற்றிக்காக சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபட்டார் சிங்கை ராமச்சந்திரன்.
இதைதொடர்ந்து ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கபட்டார். அப்போது முதலமைச்சராக பதவியேற்ற ஒ.பி.எஸ்சின் பதவியை வலுகட்டாயமாக பறித்தார் சசிகலா.
பின்னர், ஆத்திரமடைந்த ஒ.பி.எஸ் அதிமுகவை இரண்டு அணியாக பிரித்தார். இதையடுத்து சிங்கை ராமச்சந்திரன் ஒ.பி.எஸ் தரப்பிற்கு சென்றார்.
இதனால் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக சிங்கை ராமச்சந்திரனை நீக்கிவிட்டு மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யனை பொதுச்செயலாளர் சசிகலா நியமித்தார்.
இந்நிலையில், அதிமுக அம்மா அணி சார்பில் ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரையில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
அப்போது வேலைவாய்ப்பு குறித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த பேனரில் சசிகலா மற்றும் தினகரன் படங்கள் பதியபடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சசிகலா ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.