எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை ஓபிஎஸ்ஐ வரவேற்க அவர் தயாராக இல்லையென தெரிவித்த ராஜன் செல்லப்பா, அதிமுகவை பொருத்தவரை அவர் புற்றுநோயாக தான் இருப்பார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை நூலகம்- ராஜன் செல்லப்பா கேள்வி
முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பங்கேற்று மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, மதுரையில் கட்டப்பட்டுள்ள நூலகம் 80 கோடிக்கு மதிப்பிடப்பட்டு 210 கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. அதற்கான விளக்கத்தை சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அளிப்பார் என்று நம்புகிறேன். இந்த நூலகம் காட்சி கூடமாகவும் அல்லது நினைவு மண்டபமாக அமைந்து விடக்கூடாது. இது உண்மையான பயிலகமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
ஓபிஎஸ் ஒரு புற்று நோய்
அதிமுகவில் இருந்து சென்றவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், மன்னிப்பு கடிதம் தொண்டர்களுக்கு தான். ஈபிஎஸ்ஐ பொறுத்தவரை ஓபிஎஸ்ஐ வரவேற்க அவர் தயாராக இல்லை. நாங்கள் வேண்டும் என்று தான் சொல்கிறோம், அவர் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை. அவர் செய்த துரோகங்கள், திமுகவுடன் இருக்கும் தொடர்புகளை வைத்து அவர் விலகி வர முடியாது இங்கு வந்தாலும் அதிமுகவை பொருத்தவரை அவர் புற்றுநோயாக தான் இருப்பார் என விமரசித்தவர், நிச்சயமாக கட்சிக்கு பலனாக இருக்க மாட்டார் கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சியை கெடுத்து விடுவார் என குற்றம்சாட்டினார்.
ஓபிஎஸ்- அதிமுகவிற்கு பயன் இல்லை
ஓபிஎஸ் வருவதால் லாபம் இல்லை. ஓபிஎஸ் வருவார் என்றும், மன்னிப்பு கடிதம் கொடுப்பார் என்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.ஓபிஎஸ் மற்றும் அவரின் மகன் உடைய அரசியல் வரலாறு, பொதுவாழ்வு வரலாறு நீதிமன்றத்தால் மக்கள் மன்றத்தால் முடிந்து ஓய்ந்து விட்டது. இனி அவர் எதற்குமே சரியாக வர மாட்டார் என்றார். கோடநாடு கொலை வழக்கு ஏற்கனவே விசாரணை முடிந்து விட்டது, என்ன செய்தாலும் எங்களுக்கு பயமில்லை. ஓபிஎஸ் பற்றி பேசக்கூடாது என்று இருக்கிறோம்.
இதையும் படியுங்கள்
இபிஎஸ் தலைமையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் திடீர் ஆலோசனை.! டெல்லி பயணம் தொடர்பாக முக்கிய முடிவா.?