2023 - 2024 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவம் படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர 40,193 மாணவர்கள் விண்ணப்பத்துள்ளனர்.
மருத்துவ தரவரிசைப்பட்டியல்
அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியல் ,7.5% அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியல், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியல் என மூன்று தரவரிசை பட்டியல்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். இந்த தரவரிசைப் பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்கள் பெற்றும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந் மாணவர் பச்சையப்பன் 565 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பொது கலந்தாய்வில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண்ணுடன் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
மருத்துவ படிப்பிற்கு 40ஆயிரம் விண்ணப்பம்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2023-2024 ஆம் கல்வி ஆண்டின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக 40200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3042 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும்,முன்னாள் படை வீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 420 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 6326, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பிடிஎஸ் இடங்கள் 1768. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5% சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 66 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ கல்ந்தாய்வு எப்போது.?
தென்காசி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கவும், மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும், கோவையில் எய்ம்ஸ் அமைக்க வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும், நெக்ஸ்ட் தேர்வு கூடாது உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி. மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 20ம் தேதி அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங் தொடங்கினால், தமிழ்நாட்டில் 25ம் தேதி கவுன்சிலிங் தொடங்கும்.
இதுவரை மத்திய அரசின் சார்பில் மருத்துவ கலந்தாய்விற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கவில்லை. இணையதளத்தில் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவை மாறுதலுக்கு உட்பட்டவையாக இருப்பதால் தேதியை உறுதியிட்டு சொல்ல முடியவில்லை என்றார். 7.5% உட்பட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நடைபெறும். பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
இபிஎஸ் தலைமையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் திடீர் ஆலோசனை.! டெல்லி பயணம் தொடர்பாக முக்கிய முடிவா.?