முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் 3 மாம்பழத்தை வைத்து ராகுல் காந்தி வழிபட்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் 3 மாம்பழத்தை வைத்து ராகுல் காந்தி வழிபட்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரியில் இன்று தொடங்க இருக்கும் பாத யாத்திரையில் கலந்துகொள்வதற்காக ராகுல் காந்தி நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராகுலின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்றார். பின்னர், தந்தையின் நினைவிடத்தில் ராகுல் 10 விநாடி கைகூப்பி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து, மல்லிகை மலர்களால் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, ஒருமுறை நினைவிடத்தைச் சுற்றி வந்தார்.
இதையும் படிங்க;- வெறுப்பு அரசியலுக்கு என் தந்தையை இழந்தேன்.. என் நாட்டை இழக்க மாட்டேன்.. ராகுல் காந்தி..!
undefined
பின்னர், தந்தையின் புகைப்படத்தின் முன் அமர்ந்து வீணை காயத்ரியின் இசை அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில், ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காவேரி, நர்மதா, கங்கை, கோதாவரி, யமுனா, புனித மெக்காவில் இருந்து ஜம்ஜம் நீர், இயேசு ஞானஸ்தானம் செய்த ஜோர்தான் நதியில் எடுத்த புனித நீர் ஆகியவை கலசத்தில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
மேலும், ராஜீவ்காந்தி விரும்பி சாப்பிடக்கூடிய பழமும், அவர் இறுதியாக சாப்பிட்ட மாம்பழம் அவர் நினைவாக, ஆந்திர மாநிலத்தில் இருந்து விமானம் மூலமாக பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்டு, ராஜீவ் நினைவிடத்தில் வாழை இலையில் மூன்று மாம்பழம் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க;- ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவே இல்ல.. பல்டி அடிக்கும் அண்ணாமலை