50ஆயிரம் தொண்டர்களின் உற்சாகத்தில் ராகுல் காந்தி...! 2நாள் இந்தியா ஒற்றுமை பயணத்தில் பொதுமக்களுடன் சந்திப்பு

By Ajmal KhanFirst Published Sep 8, 2022, 11:16 AM IST
Highlights

இந்தியா ஒற்றுமை என்கிற பாத யாத்திரையின் இரண்டாம் நாள் நிகழ்வை ராகுல் காந்தி தொடங்கியுள்ள நிலையில், 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள், தொண்டர்கள் ராகுலுடன் யாத்திரை செல்கின்றனர். 

இரண்டாம் நாள் பயணத்தை தொடங்கிய ராகுல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை நேற்று தொடங்கினார். கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம் முன்பு தனது நடை பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி, 150 நாட்களில் 3500 கி.மீ தூரம் நடந்து செல்லத் திட்டமிட்டுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 10-ம் தேதி வரை சுமார் 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். 11-ம் தேதி காலை கேரளாவில் பயணத்தை தொடர்கிறார். தினமும் 18 முதல் 20 கிலோ மீட்டர் வரை அவர் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக  3,700 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார். 

50 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்பு

இந்தியா ஒற்றுமை யாத்திரையின் 2வது நாள் பயணத்தை இன்று அதிகாலை ராகுல் காந்தி தொடங்கினார். இன்று காலை பயணத்தை தொடங்கியதும்  தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார். ராகுல் காந்தியுடன் இன்று 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் யாத்திரை செய்கின்றனர். காங்கிரஸ் நிர்வாகிகள் இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து களமிறக்கப்பட்டுள்ளனர்.  இரண்டாவது நாள் நடை பயணம் அகஸ்தீஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரை கொட்டாரம் வழியாக மதியம் சுசீந்திரத்திற்கு செல்கிறது. அங்கு மதிய இடைவேளைக்குப் பின்பு, மாலையில் புறப்பட்டு இடலாக்குடி வழியாக இரவில் கோட்டார் சந்திப்பில் நிறைவடைகிறது.

rahul gandhi yatra: இந்தியா மோசமான பொருளாதார பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது: ராகுல் காந்தி எச்சரிக்கை

11ஆம் தேதி கேரளாவில் பாதயாத்திரை

இன்று  இரவு ஸ்காட் கல்லூரி வளாகத்தில் ராகுல் காந்தி தங்கவுள்ளார். 10ஆம் தேதி இரவு தமிழக கேரள எல்லையான செறுவாரக் கோணத்தில் நிறைவடையும் நடை பயணம் 11ஆம் தேதி ராகுலின்  நடைபயணம் கேரளாவிற்குள் நுழைகிறது. இந்தநிலையில்  ராகுல் காந்தியுடன்  பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் தலைவர்கள் தங்குவதற்காகவும், அதேபோல் ராகுலுடன் காந்தியுடன் கடைசி வரை பயணம் செய்யும்  28 பெண்கள் உள்ளிட்ட 118 பேருக்கு தங்கவும், தூங்கவும் மொத்தம் 60 கேரவன்கள் சகல வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

இபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்ல எதிர்ப்பு.. ஓபிஎஸ் தரப்பு அதிரடி மூவ்..!

click me!