உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Sep 8, 2022, 10:57 AM IST
Highlights

அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2011 முதல் 2015வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்  வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் 3  வழக்குகளை பதிவு செய்தனர். 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2011 முதல் 2015வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்  வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் 3  வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகள் எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 

இதையும் படிங்க;- அதிமுகவின் 50 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு தாவ திட்டம்.. எடப்பாடி பழனிச்சாமியின் தூக்கத்தை கலைத்த ஆர்.எஸ் பாரதி

இதனிடையே, சம்பந்தப்பட்ட ஒரு வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவர் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் விசாணையின் போது புகார்தாரர்கள் தரப்பில் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டு பிரச்னையை சுமுகமாகத் தீா்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பினரின் கருத்துகளைப் பதிவு செய்து கொண்ட உயா்நீதிமன்றம், அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்டோா் மீதான வழக்கை ரத்து செய்து  உத்தரவிட்டார். 

இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட தர்மராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், வி.ராம சுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.  அதில், அமைச்சருக்கு எதிரான பணமோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தனர். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு எதிராக அவதூறு கருத்து...! அதிமுக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்

click me!