இபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்ல எதிர்ப்பு.. ஓபிஎஸ் தரப்பு அதிரடி மூவ்..!

By vinoth kumar  |  First Published Sep 8, 2022, 11:09 AM IST

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வர உள்ளதால் அவரை வரவேற்க தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


எடப்பாடி பழனிசாமியை அதிமுக அலுவலகத்தில் அனுமதிக்கக் கூடாது என டிஜிபியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி புகார் மனு அளித்துள்ளார். 

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதன் பிறகு இபிஎஸ் தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு வழக்கில் 'கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதோடு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- எடப்பாடி போன அதே இடம்.. ‘வேற’ மாறி பிளான் போட்ட பன்னீர்.. ஆடிப்போன ஈபிஎஸ் தரப்பு - இதுதான் காரணமா!

 சுமார் 2  மாதங்கள் ஆனாலும் அவர் இன்னும் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் செல்லவில்லை. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி முதன் முறையாக இன்று காலை அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ளார். அப்போது, அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள நிறுவன தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வர உள்ளதால் அவரை வரவேற்க தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி தமிழக டிஜிபியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும், சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருவதாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  அடுத்தடுத்து அஸ்திரத்தை ஏவும் ஓபிஎஸ்.. தப்புவாரா எடப்பாடியார்..!

click me!