
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி தமிழக காங். எம்எல்ஏக்களுடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாள் விழா மற்றும் வைர விழா நேற்று மாலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவருக்கு உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தால் பயணத்தை ஒத்திவைத்தார்.
அவருக்கு பதிலாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி வைர விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகுல்காந்தி நேற்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை வந்தார்.
பின்னர் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்.
இதையடுத்து வைர விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ஸ்டாலின், ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் ஆகியோர் ஒரே காரில் பயணித்தனர்.
வைரவிழா நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், கிண்டியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ராகுல்காந்தி தங்கினார்.
இந்நிலையில், இன்று தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் புதுச்சேரி மாநில அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.