
சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் இருந்தே அந்த அணியினர் பல்வேறு விதமான நாடகங்களை நடத்தி வருகின்றனர் என்றும் அந்த நாடகம் என்று முடிவுக்கு வருமோ அப்போதுதான் இரு அணிகள் இணைப்பு சாத்தியமாகும் என தெரிவித்தார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் விருத்தாசலத்தில் செய்தியாளக்ளிடம் பேசினார். அப்போத ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும் என்றால் உரிய நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. அந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி இது வரை நிறைவேற்றவில்லை என ஓபிஎஸ் குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை அளித்தபோது, டாக்டர்கள் தெரிவித்த தகவல்களை நம்பி தான் நாங்கள் அமைதியாக இருந்தோம்.
அப்போது, ஜெயலலிதாவுக்கு வெளிநாடுகளில் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கலாம் என்று நான் அப்போதைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடமும், தம்பிதுரையிடமும் பலமுறை வலியுறுத்தினேன். ஆனால் இப்போது ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது தெளிவாக தெரிகிறது என ஓபிஎஸ் தெரிவித்தார்.
அதேபோல் சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து கழகம் விடுபட வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். தொடர்ந்து இந்த கோரிக்கையை வைப்போம் என தெரிவித்தார்.
தொடக்கத்தில் இருந்தே எடப்பாடி தரப்பினர் நாடகமாடி வருகின்றனர். அவர்கள் நாடகத்தை நிறுத்தினால் மட்டுமே அணிகள் இணைவது சாத்தியம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.