"நாட்டில் காவிகள் இருக்கலாம்..ஆனால் பாவிகள் இருக்கக்கூடாது" - தமிழிசை பரபரப்பு பேச்சு

 
Published : Jun 04, 2017, 09:37 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
"நாட்டில் காவிகள் இருக்கலாம்..ஆனால் பாவிகள் இருக்கக்கூடாது" - தமிழிசை பரபரப்பு பேச்சு

சுருக்கம்

tamilisai slams stalin and rahul

எவ்வளவு முயற்சி செய்தாலும் ஸ்டாலினும், ராகுலும் ஆட்சி பொறுப்புக்கு வர முடியாது என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திராஜன் தெரவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது , நேற்று கருணாநிதிக்கு நடந்தது வைர விழா அல்ல,  பிரதமர் மோடியை விமர்சிக்கும் விழாவாக நடந்தது என குற்றம்சாட்டினார்.

 எதிர்கட்சிகள் பொருளாதாரத்தை புரிந்து கொண்டு பேச வேண்டும். ஒன்றிணைந்து கூவினாலும் மத்திய அரசை ஒன்றும் செய்ய முடியாது. மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடக்கிறது. எவ்வளவு முயற்சி செய்தாலும், ஸ்டாலினும், ராகுலும் ஆட்சி பொறுப்புக்கு வர முடியாது என்று தெரிவித்தார்..

அவசர நிலைகொண்டு வந்து சுதந்திரம் பறிபோனதே காங்திரஸ்  ஆட்சியில்தான் என கூறிய தமிழிசை, நாட்டில் காவிகள் இருக்கலாம் ஆனால் பாவிகளாகத்தான் இருக்கக் கூடாது என தெரிவித்தார்..

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்