கொரோனா போரில் மோடி அரசு தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு.!!

By Thiraviaraj RMFirst Published Apr 4, 2020, 11:06 PM IST
Highlights

கொரோனா வைரஸை எதிர்க்க இந்தியாவில் போதுமான அளவிற்கு சோதனையிடப்படவில்லை. மக்களை கைதட்ட சொல்வது மற்றும் வானத்தில் டார்ச் ஒளி எழுப்புவதால் பிரச்னையை தீர்க்க முடியாது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார். 

T.Balamurukan

கொரோனா வைரஸை எதிர்க்க இந்தியாவில் போதுமான அளவிற்கு சோதனையிடப்படவில்லை. மக்களை கைதட்ட சொல்வது மற்றும் வானத்தில் டார்ச் ஒளி எழுப்புவதால் பிரச்னையை தீர்க்க முடியாது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார். 

Latest Videos

கொரோனா வைரஸை ஒழிக்க இந்தியா, போதுமான அளவிற்கு சோதனையிடப் படவில்லை. மக்களை கைதட்ட சொல்வது மற்றும் வானத்தில் டார்ச் ஒளி எழுப்புவதால் பிரச்னையை தீர்க்க முடியாது என காங்., முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஏப்.,5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை அணைத்து, பால்கனியில் நின்றுக்கொண்டு தீபம், டார்ச் ஒளிர செய்யுங்கள் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல், டுவிட்டரில் ..,'கொரோனா வைரஸை எதிர்க்க இந்தியாவில் போதுமான அளவிற்கு சோதனையிடப்படவில்லை. மக்களை கைதட்ட சொல்வது மற்றும் வானத்தில் டார்ச் ஒளி எழுப்புவதால் பிரச்னையை தீர்க்க முடியாது. இந்தியாவில் ஒரு மில்லியன் மக்களில் எத்தனை பேருக்கு சோதனை செய்யப்பட்டது.அதில், இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 29 பேரை சோதித்து வருவதாகவும், பாகிஸ்தானில் 67 பேரை சோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, தென்கொரியா ஒரு மில்லியனுக்கு 7,622 பேரை சோதனை செய்கிறது.என்று அவர் பதிவிட்டுள்ளார்.

click me!