நேரக்கட்டுப்பாடு,தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பு தரணும் கறார் காட்டும் முதல்வர் பழனிச்சாமி.!!

By Thiraviaraj RMFirst Published Apr 4, 2020, 9:45 PM IST
Highlights

அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்கான காலநேரம் காலை 6 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை இருக்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. 

T.Balamurukan

அத்தியாவசிய பொருட்களான உணவு மற்றும் காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கான காலநேரம் பற்றிய அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்கான காலநேரம் காலை 6 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை இருக்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில், இந்த காலஅவகாசம் குறைக்கப்பட்டு உள்ளது என தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. பொதுமக்கள் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணிவரை தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.  

கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்படி தனியார் மருத்துவமனைகளுக்கு அவர் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரையும் தாக்க கூடியது.  அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என மத தலைவர்கள் ஒப்புதல் அளித்து இருப்பது மகிழ்ச்சி. கொரோனா பாதிப்புக்கு மத சாயம் பூசுவது தவிர்க்கப்பட வேண்டும்.  மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

click me!