கோவா சுகாதார அமைச்சரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான விஸ்வஜித் ரானே, சோனியா காந்தியை பார்த்து காட்டுக் கூச்சல் போட்டு கத்தியதாக பரபரப்பை கிளப்பியுள்ளார். ‘‘ராகுல் தனது தாயை மற்றவர்கள் முன்னிலையில் மதிக்க தெரியாவிட்டால் அவர் எப்படி பாரத மாதாவை மதிப்பார்’’ என்று ரானே கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவா அமைச்சரான ரானே ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், ‘‘ராகுல் காந்தி அறைக்குள் வந்தவுடன் சோனியா காந்தியைப் பார்த்து கத்தியுள்ளார். 'என் தந்தையான முன்னாள் கோவா முதல்வர் பிரதாப்சிங் ரானே ராகுல் காந்தி அவரது தாய் சோனியா காந்தியைப் பார்த்து கத்தியதைப் பார்த்துள்ளார். ராகுல் காந்தி தனது தாயாரிடம் கத்திக் கொண்டிருந்தபோது, என் தந்தை அங்கு இருந்துள்ளார். ராகுலின் நடத்தையைப் பார்த்து தனது தந்தை மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். வீடு திரும்பிய என் தந்தை எங்களிடம், ‘‘தன் தாயாரை மதிக்க முடியாத ஒரு மனிதன், பாரத மாதாவை எப்படி மதிப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியும்? ராகுல் காந்தியின் இந்த அணுகுமுறையை நான் பார்த்ததில்லை. இந்தப் பையனுக்கு (ராகுல் காந்தி) என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியவில்லை. அவனது பழக்கம் சரியில்லை.அவனுக்குக் கட்டுப்பாடும் இல்லை.இது நல்லதல்ல’’ என்று எங்களிடம் கூறினார்.
பொது நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி தனது தாயை அதிகம் மதிப்பதாகவே தெரிகிறது என நிகழ்ச்சி தொகுப்பாளர் விஸ்வஜித் ரானேவிடம் கேட்டபோது, 'பொது இடத்தில் மதிப்பதும், வீட்டில் மதிப்பதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள்' என்று ரானே பதிலளித்தார்.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட அமித் மாளவியா, ‘‘ராகுல் காந்தி அறைக்குள் வந்து சோனியா காந்தியைக் கத்தத் தொடங்கி உள்ளார். இதைச் சொன்னவர் முன்பு காங்கிரஸில் இருந்த கோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை பார்த்தவர் அவரது தந்தை பிரதாப்சிங் ரானே. மூத்த காங்கிரஸ் தலைவர் . 7 முறை கோவாவின் முதல்வராக இருந்தவர். பிரதமர் மோடியின் தாயார் காங்கிரஸ் மேடையில் இருந்து அவமரியாதை செய்யப்பட்டதில் ஆச்சரியமில்லை’’ என்று அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.