நல்லது சொன்னேன் எடப்பாடி கேட்கல... மகிழ்ச்சிதான்..! நீக்கப்பட்டதற்கு செங்கோட்டையன் பதிலடி..!

Published : Sep 06, 2025, 12:39 PM IST
sengottaiyan

சுருக்கம்

செங்கோட்டையன்  மீது தலைமை கழகத்தால் நீக்கப்பட்டது ஒரு தவறான முடிவு. அதற்கு பதிலாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருக்கலாம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். பிரிந்தவர்களை இணைக்காவிட்டால் இபிஎஸ்ஸின் பிரசாரத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம் என்றும் அவர் தெரிவித்தார். செங்கோட்டையனின் கருத்துக்கு, ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கியிருக்கிறார்.

அவரோடு அவரது ஆதரவாளர்களான ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. தம்பி (எ) சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி, கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் தேவராஜ், அத்தாணி பேரூராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ரமேஷ், துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வேலு (எ) மருதமுத்து, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் மோகன்குமார் கியோரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன். கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதால் உறுப்பினராக மட்டும் தொடர்கிறார் செங்கோட்டையன், இந்நிலையில்ான் நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள செங்கோட்டையன், ‘ ‘அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதற்காக கருத்துக்களை வெளியிட்டேன். தர்மம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பிரிந்தவர்களை இணைக்க வலியுறுத்தினேன். அதை ஏற்றுக் கொள்ளாமல் என்னை பொறுப்புகளில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். கட்சி பொறுப்புகளில் இருந்து என்னை நீக்கியதால் வேதனை இல்லை. இதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் செங்கோட்டையன்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை