நான் என்ன ஜான் பிரதீப்பா..? கெடுவான்..! செங்கோட்டையனை நீக்கியதற்கு கொதித்தெழுந்த டி.டி.வி.தினகரன்..!

Published : Sep 06, 2025, 01:24 PM IST
ttv dhinakaran

சுருக்கம்

"எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன். செங்கோட்டையனை பொறுப்பில் இருந்து நீக்கியது எடப்பாடிக்குதான் பின்னடைவு''

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். பிரிந்தவர்களை இணைக்காவிட்டால் இபிஎஸ்ஸின் பிரசாரத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம் என்றும் அவர் தெரிவித்தார். செங்கோட்டையனின் கருத்துக்கு, ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கியிருக்கிறார்.

அவரோடு அவரது ஆதரவாளர்களான ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. தம்பி (எ) சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி, கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் தேவராஜ், அத்தாணி பேரூராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ரமேஷ், துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வேலு (எ) மருதமுத்து, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் மோகன்குமார் கியோரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன். கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதால் உறுப்பினராக மட்டும் தொடர்கிறார் செங்கோட்டையன், இந்நிலையில்ான் நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த செங்கோட்டையன், ‘ ‘அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதற்காக கருத்துக்களை வெளியிட்டேன். , தர்மம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பிரிந்தவர்களை இணைக்க வலியுறுத்தினேன்அதை ஏற்றுக் கொள்ளாமல் என்னை பொறுப்புகளில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். கட்சி பொறுப்புகளில் இருந்து என்னை நீக்கியதால் வேதனை இல்லை. இதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் 

செங்கோட்டையனை நீக்கியதற்கு கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்,  ‘ ‘கெடுவான் கேடு நினைப்பான். எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன். செங்கோட்டையனை பொறுப்பில் இருந்து நீக்கியது எடப்பாடிக்குதான் பின்னடைவு. செங்கோட்டையன் முயற்சி வெற்றிபெறுமா என கணித்துச் சொல்வதற்கு, நான் ஒன்றும் ஜான் பிரதீப் (வெதர்மேன்) கிடையாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!