விவரம் தெரியாமல் உளறி அவமானப்பட்ட கத்துக் குட்டி ராகுல். டுவிட்டரில் வகுப்பெடுத்து பங்கம் செய்த பாஜக அமைச்சர்.

Published : Feb 17, 2021, 06:56 PM IST
விவரம் தெரியாமல் உளறி அவமானப்பட்ட கத்துக் குட்டி ராகுல். டுவிட்டரில் வகுப்பெடுத்து பங்கம் செய்த பாஜக அமைச்சர்.

சுருக்கம்

மத்திய அரசு கடந்த 2019 மே 31ஆம் தேதி மீன்வளத் துறைக்கு புதிய அமைச்சகத்தை உருவாக்கியது என்பதை ராகுல்காந்தி அறிந்துக்கொள்ள வேண்டும். சுமார், 20050 கோடி ரூபாய் மாஸ்டர் பிளானை (பி.எம்.எம்.எஸ்.ஒய்) தொடங்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்,

விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சகம் இருக்கும்போது ஏன் கடல் விவசாயிகளான மீனவர்களுக்கு மீன் வள அமைச்சகம் இருக்கக் கூடாது எனவும், மத்திய அரசு அதை உடனே அமைக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி பேசி உள்ளார். இதை மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் கிரிராஜ் சிங்,  ராகுல்காந்தியின் அறியாமையை கடுமையாக விமர்சித்து டுவிட் செய்துள்ளார். அதில், வயநாடு எம்பி ராகுல்காந்தி மத்திய மீன்வள அமைச்சகத்திற்கு வரவேண்டும் என அழைக்கிறேன். அப்படி அவர் வந்தால் மீன்வள அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களை நான் அவர் அறிந்துகொள்ளும் வகையில் பாடம் எடுக்க தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரியில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக மீனவர் சமுதாய மக்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், விவசாயிகள் ஒவ்வொருவரும் நாட்டின் முதுகெலும்பாக இருக்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நான் ஏன் மீனவர்களின் கூட்டத்திற்கு வந்துள்ளேன், ஏன் விவசாயிகளைப் பற்றி இங்கே பேசுகிறேன் என்று இப்போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் கடலின் விவசாயிகள் என்று நான் கருதுகிறேன், மேலும்  நிலத்தில் விவசாயம் செய்பவர்களுக்கு ஒரு அமைச்சகம் இருக்க முடியும் என்றால், கடல் விவசாயிகளான மீனவர்களுக்கு ஏன் தனி அமைச்சகம் இருக்கமுடியாது என்று சற்று எண்ணிப்பாருங்கள், மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என்றார். 

மேலும், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் அனைத்தும் பெரிய நிறுவனங்களால் கட்டுப்படுத்த வேண்டும்  என்று மத்திய அரசு விரும்புகிறது, காரணம் பெரு நிறுவனங்களே அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் என்றார். இந்நிலையில் ராகுல்காந்தி மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இருப்பதை மேற்கோள்காட்டி மத்திய மீன்வள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சராக இருக்கும் கிரிராஜ் சிங் ட்வீட் செய்துள்ளார். அதில், மத்திய அரசு கடந்த 2019 மே 31ஆம் தேதி மீன்வளத் துறைக்கு புதிய அமைச்சகத்தை உருவாக்கியது என்பதை ராகுல்காந்தி அறிந்துக்கொள்ள வேண்டும். சுமார், 20050 கோடி ரூபாய் மாஸ்டர் பிளானை (பி.எம்.எம்.எஸ்.ஒய்) தொடங்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், துறை சார்பாக மீனவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது, இதுவரை 3 ஆயிரத்து 682 கோடி ரூபாய் அரசு செலவிட்டுள்ளது. 

ராகுல் காந்தி அவர்கள், தயவுசெய்து மீன்வளத் துறை அமைச்சகத்திற்கு வரவேண்டும். அப்படி வந்தால் நாடு முழுவதும் மீன்வளத் துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களை அவர் அறிந்து கொள்ள முடியும்  என பதிவிட்டுள்ளார். அதேபோல மற்றொரு ட்விட்டரில் பதிவிட்டுள்ள கிரிராஜ் சிங், அதை இத்தாலி  மொழியில் ராகுலுக்கு புரியும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார். இத்தாலியில் மீன்வளத்துறை தனி அமைச்சகம் இல்லை என்று அவர் ட்வீட் செய்துள்ள அவர், தனித்தனி மீன் வள அமைச்சகம் இல்லை இது வேளாண் மற்றும் வனவியல் கொள்கைகள் அமைச்சகத்தின் கீழ் வருகிறது என்று கிரிராஜ் சிங் இத்தாலிய மொழியில் ட்வீட் செய்துள்ளார். அதில் ராகுல் காந்தியைக் டேக் செய்து அவர் அந்த கருத்தைப் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

PREV
click me!

Recommended Stories

அனிதா மரணத்தை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!
களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி