எனது தந்தையை கொன்றவர்கள் மீது எந்த கோபமும் இல்லை.. நான் மன்னித்து விட்டேன்.. ராகுல்காந்தி உருக்கம்...!

By vinoth kumarFirst Published Feb 17, 2021, 6:52 PM IST
Highlights

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசை கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட விடவில்லை என முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசை கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட விடவில்லை என முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசார களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் விலகலால் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி, துணை நிலை ஆளுநர் நீக்கம் என பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று புதுச்சேரி வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர், பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி;- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசை கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட விடவில்லை. தேசத்தின் பிரதமராக இருக்கும் மோடி, புதுச்சேரி மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளவில்லை. புதுச்சேரி யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. அப்படி நினைத்தால் விரைவில் ஏமாற்றம் அடைவார்கள். புதுச்சேரிக்கு வெளியே உள்ளவர்களுக்கு எந்நாளும் அமடமாநிலம் சொந்தமாகாது. 

மேலும், மத்திய அரசு கொடுத்த தைரியத்தினால் தான் கிரண்பேடி அதிகாரத்தை கையில் எடுத்தார். புதுச்சேரி மக்களை காப்பாற்ற தர்மயுத்தத்தில் ஈடுபட உள்ளேன். எங்களுக்கு தரும் ஓட்டு, புதுச்சேரி மக்களின் கனவுகளை நிறைவேற்றும். என்னை போன்ற மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிப்பதில்லை. தமிழகத்தில் தமிழ் பேச அனுமதிப்பதில்லை. அரசை எதிர்த்து பேசினால், தீவிரவாதி என்கிறார்கள் என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது. எனது தந்தையை கொன்றவர்கள் மீது எந்த கோபமும் இல்லை. நான் அவர்களை மன்னித்து விட்டேன் என ராகுல்காந்தி உருக்கமாக பேசினார்.

click me!