அண்டப்புளுகு நாராயணசாமி... ராகுல் காந்தியை ஏமாற்ற சுடச்சுடச்சொன்ன பச்சைப்பொய்..!

Published : Feb 17, 2021, 06:33 PM ISTUpdated : Feb 17, 2021, 06:35 PM IST
அண்டப்புளுகு நாராயணசாமி... ராகுல் காந்தியை ஏமாற்ற சுடச்சுடச்சொன்ன பச்சைப்பொய்..!

சுருக்கம்

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, இந்தியா முழவதும் வைரலாகி வரும் இந்த வீடியோவை பாஜக முக்கிய தலைவர்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவ செய்து அவர்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒருநாள் பயணமாக இன்று புதுச்சேரி வந்தார். இதற்காக டெல்லியில் இருந்து இன்று காலை ராகுல் காந்தி சென்னை வந்தவர். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி சென்றார். புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 4 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இவர்களில் 2 பேர் பாஜகவுக்கு தாவிவிட்டனர். இதனால் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் நிலையில் உள்ளது.

இதனிடையே புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திடீரென நீக்கி இருக்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். அத்துடன் தெலுங்கானா மாநில ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன், புதுவை துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி வந்துள்ள ராகுல் காந்தி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது, இதனை தொடர்ந்து புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியிலுள்ள மீனவர்களிடையே ராகுல் காந்தி பேசினார்.

அப்போது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தவறாக மொழி பெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றிய சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளது. ஒரு பெண் ராகுல்காந்தி அவர்களிடம் சமீபத்தில் புயலின் போது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை. ஏன் இங்கே இருக்கும் முதல்வர் நாராயணசாமி கூட எங்களை வந்து பார்க்கவில்லை என அந்த பெண் தமிழில் தெரிவித்தார்.

 

இதற்கு ராகுல்காந்தி அந்த பெண் என்ன சொல்லுகிறார் என நாராயணசாமியிடம் கேட்க, அதற்கு புயலின் போது தான் பார்க்க வந்ததற்கு நன்றி கூறுகிறார் அந்த பெண் என பொய்யாக மொழி பெயர்த்து கூறினார் நாராயணசாமி, இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, இந்தியா முழவதும் வைரலாகி வரும் இந்த வீடியோவை பாஜக முக்கிய தலைவர்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவ செய்து அவர்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அனிதா மரணத்தை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!
களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி