
வரலாற்று சின்னம் குதூப் மினார்
டெல்லியில் புகழ் பெற்ற குதூப் மினார் கோபுரம் பல நூற்றாண்டுகளை கடந்தது. டெல்லியில் இந்து மதத்தின் கடைசி ஆட்சியாளரின் வீழ்ச்சிக்கு பின்பு, முஸ்லிம்களின் ஆட்சியை கொண்டாடும் வகையில் வெற்றி கோபுரம் கடந்த 1193ம் ஆண்டில் டெல்லி சுல்தான் குத்புதீன் ஐபக் என்பவரால் கட்டப்பட்டது. 72.5 மீட்டர்கள் (237.8 அடி) உயரம் கொண்ட கோபுரமாகும். உலகிலேயே, செங்கல் கற்களால் கட்டப்பட்ட உயர்ந்த கோபுரம் ஆகும். இந்தியாவின் முதல் இசுலாமிய அரசரான குதுப்த்தீன் ஐபக் ஆணையின் படி, இந்தத் கோபுரத்தின் கட்டிடப்பணி 1193 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, 1386 ஆம் ஆண்டில் பிரோஸ் ஷா துக்ளக் மேற்பார்வையில் கட்டிமுடிக்கப்பெற்றது. குதுப் மினார் என்பது இந்திய-இசுலாமிய கட்டிடக்கலைக்கு மிகவும் பழமையான எடுத்துக்காட்டுக்கு பெயர் பெற்றதாகும்.
யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகாரம்
இந்த வளாகம் யுனெசுக்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியக் களமாக உருவாக்கப்பட்டுள்ளது. . டில்லியில் மிகவும் பிரபலமான சுற்றுலாப் பயணிகள் விரும்பிப் பார்க்கும் இடமாக குதுப்மினார் திகழ்கிறது. தாஜ்மஹாலை பார்ப்பதை விட இந்த இடத்தை கடந்த 2006 ஆம் ஆண்டில் 3.9 மில்லியன் சுற்றலாப்பயணிகள் கண்டு களித்தனர். இந்த குதுப்மினார் கோபுரம் உருவாக்கப்பட்ட காரணம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் பரவி வருகிறது. பல வரலாற்று வல்லுனர்கள் முதலில் இந்தியாவுக்கு வந்து வெற்றி கண்ட துருக்கிய சுல்தான் குத்துபுத்தின் ஐபக் அவர்களின் நினைவை போற்றும் வகையில் இந்தப் பெயர் சூட்டியாதாகக் கூறுகின்றனர். ஒரு சிலர் ட்ரான்ஸ்ஓக்சியானா என்ற இடத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஒரு துறவி குத்துபுத்தின் பக்தியார் காக்கி என்பவரை போற்றும் வகையில் இந்த பெயர் சூட்டப் பெற்றதாக கூறப்படுகிறது.
கோயிலை இடித்து விட்டு குதுப்மினார்
இந்தநிலையில் இந்த கோபுரம், 27 கோவில்களை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக விஷ்வ இந்து பரிஷத் குற்றச்சாட்டியுள்ளது. இதுபற்றி அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளரான வினோத் பன்சால் செய்தியாளர்களிடம் கூறும் போது குதூப் மினார் உண்மையில் விஷ்ணு ஸ்தம்பம். என்றும் இந்து மற்றும் ஜைன மதத்தின் 27 கோவில்களை இடித்துவிட்டு இந்த குதுப் மினார் கோபுரம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்து சமூகத்தினரை கேலி செய்வதற்காகவும், சீண்டுவதற்காகவும் இந்த மிக பெரிய கட்டமைப்பு எழுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறினார். இந்த பகுதியில் இடிக்கப்பட்ட 27 கோயில்களையும் மீண்டும் கட்டப்பட வேண்டும் எனவும்,அந்த பகுதியில் இந்து மற்றும் ஜைன மதத்தினர் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என வினோத் பன்சால் கேட்டுக்கொண்டுள்ளார். விஷ்வ இந்து பரிஷத் செய்தி தொடர்பாளரின் குதுப் மினார் தொடர்பான கருத்து பல்வேறு தரப்பிலும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது..